புதிய பூவிது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாதென்றலே என்னைத் தொடு

Pudhiya Poovithu Song Lyrics in Tamil


BGM

ஆண் : புதிய பூவிது பூத்தது…
இளைய வண்டுதான் பாத்தது…

ஆண் : தூது வந்ததோ…
சேதி சொன்னதோ…
தூது வந்ததோ சேதி சொன்னதோ…
நாணம் கொண்டதோ… ஏன்…

பெண் : ஐ லவ் யு…
புதிய பூவிது பூத்தது…
இளைய வண்டு தான் பாத்தது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஜவ்வாது பெண்ணானது…
இரண்டு செம்மீன்கள் கண்ணானது…

ஆண் : பன்னீரில் ஒண்ணானது…
பாச பந்தங்கள் உண்டானது…

பெண் : என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ…
ஆண் : கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ…

பெண் : என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ…
ஆண் : கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ…

பெண் : தள்ளாடும் தேகங்களே…
கோவில் தெப்பங்கள் போலாடுமோ…

ஆண் : சத்தமின்றியே முத்தமிட்டதும் கும்மாளம்தான் வா…

பெண் : புதிய பூவிது பூத்தது…
இளைய வண்டு தான் பாத்தது…

பெண் : தூது வந்ததோ…
சேதி சொன்னதோ…
தூது வந்ததோ சேதி சொன்னதோ…
காதல் கொண்டதோ… சொல்…

ஆண் : புதிய பூவிது பூத்தது…
இளைய வண்டு தான் பாத்தது…

BGM

ஆண் : கல்யாணம் ஆகாமலே…
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது…

பெண் : கூடாது கூடாதென…
நாணம் காதோடு சொல்கின்றது…

ஆண் : என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ…
பெண் : உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ…

ஆண் : என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ…
பெண் : உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ…

ஆண் : தண்டோடு பூவாடுது…
வண்டு தாகங்கள் கொண்டாடுது…

பெண் : உன்னை கண்டதும்…
என்னை கண்டதும்…
உண்டாகுமோ தேன்…

ஆண் : புதிய பூவிது பூத்தது…
பெண் : இளைய வண்டு தான் பாத்தது…

ஆண் : தூது வந்ததோ…
பெண் : சேதி சொன்னதோ…

ஆண் : தூது வந்ததோ…
பெண் : சேதி சொன்னதோ…
ஆண் : நாணம் கொண்டதோ… ஏன்…

பெண் : புதிய பூவிது பூத்தது…
ஆண் : இளைய வண்டுதான் பாத்தது…


Notes : Pudhiya Poovithu Song Lyrics in Tamil. This Song from Thendrale Ennai Thodu (1985). Song Lyrics penned by Vaali. புதிய பூவிது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading