பாடாத தெம்மாங்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபூந்தோட்ட காவல்காரன்

Paadatha Themmangu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே…
பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே…
பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி…
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி…

ஆண் : யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி…
சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி…
பாடாத தெம்மாங்கு…

—BGM—

ஆண் : முன்னாடி வாழ்க்கை…
கல்லு பட்ட கண்ணாடி போல…
என் பொண்டாட்டி வாழ்க்கை…
முள்ளு மேல பட்டாட போல…

ஆண் : முன்னாடி வாழ்க்கை…
கல்லு பட்ட கண்ணாடி போல…
என் பொண்டாட்டி வாழ்க்கை…
முள்ளு மேல பட்டாட போல…

ஆண் : பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம…
தள்ளாடி நின்னேனே நான்தானே…
பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம…
தள்ளாடி நின்னேனே நான்தானே…

ஆண் : தோளில் போட்டவ என் தாயி…
என் சோகம் தீர்த்திட வாதாயி…
ஏ… சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல…
வந்தத விட்டு நின்னேனே…
நிம்மதி என்னைக்கு என்கிட்ட வந்திடுமோ…

ஆண் : பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே…
பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே…

—BGM—

ஆண் : புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட…
என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட…
புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலை போட்ட…
என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட…

ஆண் : கையெடுத்து தந்தேனே…
காவலுக்கு நின்னேனே…
கண்ணீரு ஏனம்மா பூமானே…

ஆண் : கையெடுத்து தந்தேனே…
காவலுக்கு நின்னேனே…
கண்ணீரு ஏனம்மா பூமானே…

ஆண் : சாமி கொடுக்கல குழந்தை வரம்…
உன்னாலே பேர புள்ள நூறு வரும்…
அட வந்தது எல்லாம் வந்தது இல்ல…
போவது எல்லாம் போவது இல்ல…
இன்னைக்கு நீ தந்த நிம்மதி போதுமம்மா…

ஆண் : பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே…
பாட்டோட சேராத என் சோகம் சொன்னேனே…

ஆண் : பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சி…
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சி…
யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி…
ஹான்… சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி…
பாடாத தெம்மாங்கு…


Notes : Paadatha Themmangu Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaren. பாடாத தெம்மாங்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading