சிந்திய வெண்மணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & பி. சுசீலாஇளையராஜாபூந்தோட்ட காவல்காரன்

Sindhiya Venmani Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
என் பொண்ணம்மா…

ஆண் : சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்…
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…

—BGM—

ஆண் : பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்…
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்…

பெண் : அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்…
அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்…

ஆண் : இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்…
பெண் : இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்…

ஆண் : மெல்லிய நூலிடை வாடியதே…
மன்மத காவியம் மூடியதே…

—BGM—

ஆண் & பெண் : அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்…
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே…

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
என் பொண்ணம்மா…

ஆண் : சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்…
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…

—BGM—

ஆண் : தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்…
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே…

பெண் : காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்…
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே…

ஆண் : வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்…
பெண் : எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்…

ஆண் : என் மகன் காவிய நாயகனே…
என் உயிர் தேசத்து காவலனே…

—BGM—

ஆண் : வாடிய பூமியில் கார்முகிலாய்…
மழை தூவிடும் மானுடன் என் மகனே…

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…
என் பொண்ணம்மா…

ஆண் : சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்…
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…

ஆண் : சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு…
என் கண்ணம்மா…
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு…


Notes : Sindhiya Venmani Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaran. சிந்திய வெண்மணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading