பாராமல் பார்த்த நெஞ்சம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபூந்தோட்ட காவல்காரன்

Paaramal Paartha Nenjam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…

ஆண் : இரு பார்வை அது பாடட்டும்…
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…

பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…

—BGM—

ஆண் : நித்திரை கெட்டது கண்ணே…
என் சித்திர பெண்ணே…

பெண் : முத்திரை கண்டது முன்னே…
நீ தொட்டதன் பின்னே…

ஆண் : நித்திரை கெட்டது கண்ணே…
என் சித்திர பெண்ணே…

பெண் : முத்திரை கண்டது முன்னே…
நீ தொட்டதன் பின்னே…

ஆண் : பூபாலம் கேட்டேனே…
பெண் மானை பார்த்தேனே…

பெண் : பேசாமல் நின்றேனே…
பெண் என்று ஆனேனே…

ஆண் : கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும்…
கற்பனை அல்ல…
இள வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது…
அற்புதம் அல்ல…

பெண் : நீ தொட்டதும் சுட்டது பட்டுடை விட்டது…
நானும் சொல்ல…

ஆண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…

பெண் : இரு பார்வை அது பாடட்டும்…
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…

ஆண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…

—BGM—

பெண் : மெல்லிய மல்லிகை பூவே…
புது மெல்லிசை பாடு…

ஆண் : வல்லியின் மெல்லிடை மேலே…
புது சங்கதி போடு…

பெண் : மெல்லிய மல்லிகை பூவே…
புது மெல்லிசை பாடு…

ஆண் : வல்லியின் மெல்லிடை மேலே…
புது சங்கதி போடு…

பெண் : பூந்தேகம் தாங்காது…
என் தேவன் ஏந்தாது…

ஆண் : ஆறாது தீராது…
நீ வந்து சேராது…

பெண் : பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும்…
காவியம் கண்டு…
நான் பண்ணிய புண்ணியம் உன்னுடன் கூடிடும்…
என் மனம் இன்று…

ஆண் : புவி மண்ணிலும் விண்ணிலும்…
பொன்கவி பாடிடும் தேகம் ஒன்று…

பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…

ஆண் : இரு பார்வை அது பாடட்டும்…
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…

பெண் : பாராமல் பார்த்த நெஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்…
ஜம் சஜம் ஜம் ஜம்…

—BGM—


Notes : Paaramal Paartha Nenjam Song Lyrics in Tamil. This Song from Poonthotta Kaavalkaaran (1988). Song Lyrics penned by Gangai Amaren. பாராமல் பார்த்த நெஞ்சம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading