உனக்குதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சந்தோஷ் நாராயணன் & த்வானி கைலாஸ்சந்தோஷ் நாராயணன்சித்தா

Unakku Thaan Song Lyrics in Tamil


ஆண் : அமுத கடல் உனக்குதான்…
ஆரா மழை உனக்குதான்…
நீங்கா நிழல் உனக்குதான்…
நீ கண்மணி எனக்குதானே…

ஆண் : பொருந்தி போ நீ தோளோடு…
மடியில் ஊஞ்சல் ஆடு…
என் பார்வை உன்னோடு…
உன் பொம்மை கண்ணோடு…
பேசாமல் விண்ணோடு…
நாம் மிதந்து போவோம்…

ஆண் : காதோரம் அடி ஆலோலம்…
நான் தாங்க மாரோடு வா விடுது தேனே வா…

—BGM—

ஆண் : சந்திக்கா மலர் உனக்குதான்…
கண்டிக்கா மொழி உனக்குதான்…
சிந்திக்கா நொடி உனக்குதான்…
சிரிக்கும் நதி உனக்குதானே…

ஆண் : வழியும் எச்சில் வாயோரம்…
எனது காயம் ஆறும்…
என் தங்கம் முன்னாடி…
என் காலக் கண்ணாடி…
உன் ஆசை என்னாடி…
நான் நடத்தி வைப்பேன்…

ஆண் : வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்…
உன் கால்கள் என் நெஞ்சில் வாழத் தேனே வா…

—BGM—

ஆண் : பத்து விறல் கோலம் போட…
பூமி மேல மொளச்ச சித்திரமே…
உன் அசைவ பாத்து பாத்து…
ஆயுள் கூடும் எனக்கு…

ஆண் : புன்னகையில் காலம் போக…
தோகையாக சிரிச்ச பெட்டகமே…
யாறுக்கிங்கு யாரு காவல்…
மாறி போச்சு கணக்கு…

பெண் : என் கூட பேசுற தோத்தோவ உனக்கு…
நேருல காட்டட்டுமா…
சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்…
சாப்பிட தரட்டுமா…

ஆண் : அந்த அருவி போல் அன்ப தருவாளே…
சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே…
ஐயோ தும்மிடுடி தும்மிடுடி ஆயிசு நூறாக…
என்னுள் உன்னோட பத்திர சொத்தாக…

ஆண் : என் பார்வை உன்னோடு…
உன் பொம்மை கண்ணோடு…
பேசாமல் விண்ணோடு…
நாம் மிதந்து போவோம்…
காதோரம் அடி ஆலோலம்…
நான் தாங்க மாரோடு வா விடுது தேனே…

—BGM—


Notes : Unakku Thaan Song Lyrics in Tamil. This Song from Chithha (2023). Song Lyrics penned by Vivek. உனக்குதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading