திருப்பதி சென்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்மூன்று தெய்வங்கள்

Tirupati Sendru Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருப்பதி சென்று திரும்பி வந்தால்…
ஓர் திருப்பம் நேருமடா…
உந்தன் விருப்பம் கூடுமடா…

BGM

ஆண் : திருப்பதி சென்று திரும்பி வந்தால்…
ஓர் திருப்பம் நேருமடா…
உந்தன் விருப்பம் கூடுமடா…

ஆண் : நீ திறந்திட நினைக்கும் கதவுகளெல்லாம்…
தானே திறக்குமடா…
உன்னை தர்மம் அணைக்குமடா…
உன்னை தர்மம் அணைக்குமடா…

ஆண் : திருப்பதி சென்று திரும்பி வந்தால்…
ஓர் திருப்பம் நேருமடா…
உந்தன் விருப்பம் கூடுமடா…

BGM

ஆண் : ஊருக்கு மறைக்கும் உண்மைகளெல்லாம்…
வேங்கடம் அறியுமடா…
அந்த வேங்கடம் அறியுமடா…

ஆண் : ஊருக்கு மறைக்கும் உண்மைகளெல்லாம்…
வேங்கடம் அறியுமடா…
அந்த வேங்கடம் அறியுமடா…

ஆண் : நீ உள்ளதைச் சொல்லிக் கருணையை கேட்டால்…
உன் கடன் தீருமடா…
உள்ளதைச் சொல்லிக் கருணையை கேட்டால்…
உன் கடன் தீருமடா…
செல்வம் உன்னிடம் சேருமடா…

ஆண் : திருப்பதி சென்று திரும்பி வந்தால்…
ஓர் திருப்பம் நேருமடா…
உந்தன் விருப்பம் கூடுமடா…

BGM

ஆண் : எரிமலை போலே ஆசை வந்தாலும்…
திருமலை தணிக்குமடா…
நெஞ்சில் சமநிலை கிடைக்குமடா…

ஆண் : உன் எண்ணங்கள் மாறும்…
வண்ணங்கள் மாறும்…
நன்மைகள் நடக்குமடா…
உள்ளம் நல்லதே நினைக்குமடா…

ஆண் : ஆதி ஆன உயிர் நீதி ஆன வெங்கடேஸ்வரா…
பெண் : ஆதி ஆன உயிர் நீதி ஆன வெங்கடேஸ்வரா…
ஆண் : வெங்கடேஸ்வரா…

ஆண் : அஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும்…
வெங்கடேஸ்வரா…
பெண் : அஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும்…
வெங்கடேஸ்வரா…

ஆண் : சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும்…
வெங்கடேஸ்வரா…
குழு : சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும்…
வெங்கடேஸ்வரா…

ஆண் : தஞ்சமென்றவர்கள் நெஞ்சில் அன்பு தரும்…
வெங்கடேஸ்வரா… வெங்கடேஸ்வரா… ஆஅ…


Notes : Tirupati Sendru Song Lyrics in Tamil. This Song from Moondru Deivangal (1971). Song Lyrics penned by Kannadasan. திருப்பதி சென்று பாடல் வரிகள்.


Scroll to Top