வானம் தரையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்தேவாஉன்னுடன்

Vaanam Tharaiyil Song Lyrics in Tamil


—BGM—

பெண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரரே ஆயர்தம் கொழுந்தே…

—BGM—

ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே… ஆ…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே…
தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே…

ஆண் : விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…
விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…

ஆண் : ஒருமுறை அடி ஒரே முறை…
ஒரு பார்வை பார் உலகம் சுழலும் மறுபடி…

ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…

—BGM—

ஆண் : இமைகளைக் கொண்டு இருதயம் தோன்றும்…
கதைகளை உந்தன் இரு கண்களில் வைத்தாய்…

—BGM—

ஆண் : உதடுகள் அசைவில் உயிரை உறிஞ்சும்…
செப்படி வித்தை அடி எப்படி கட்றாய்…
புருவங்களில் மலையே வளையுமடி…
புன்னகையில் ஜீவன் தவிடுபொடி…

ஆண் : பூக்களின் கனவே வா…
பூமியின் நிலவே வா…
இனிக்கின்ற தீயே வா…
இன்னிசை நதியே வா…

ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…

—BGM—

ஆண் : சித்திர இதழில் தீக்குச்சி கிழித்தாய்…
என் ரத்தத்தில் இருந்தாய்…
நான் முத்தத்தில் எரிந்தேன்…

—BGM—

ஆண் : பௌர்ணமி விழியால் பால் மழை பெய்தாய்…
என் சாம்பலில் இருந்து…
நான் சட்டென்று முளைத்தேன்…

ஆண் : பார்த்ததிலே பாதி இளைத்துவிட்டேன்…
கண்களிலே ஒன்றைத் தொலைத்துவிட்டேன்…

ஆண் : சிறகுள்ள மலரே வா…
இமைக்கின்ற சிலையே வா…
ஆனந்தக் கலையே வா…
என் ஆண்மையின் விலையே வா…

ஆண் : வானம் தரையில் வந்து நின்றதே… ஆ…
பூமி நிலவில் புகுந்துகொண்டதே…
திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே…
தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே…

ஆண் : விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…
விழிகளை வீசிய இளைய கொடி…
இந்த விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி…

ஆண் : ஒருமுறை அடி ஒரே முறை…
ஒரு பார்வை பார் உலகம் சுழலும் மறுபடி…

—BGM—


Notes : Vaanam Tharaiyil Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. வானம் தரையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading