| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | ஹரிஹரன் | தேவா | உன்னுடன் |
Kovama En Mel Kovama Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கோபமா என் மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…
ஆண் : என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…
உள்ளூயிரே உருகுதம்மா… ஆ…
ஆண் : கோபமா என்மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…
ஆண் : என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…
உள்ளூயிரே உருகுதம்மா… ஆ…
ஆண் : கோபமா என்மேல் கோபமா…
—BGM—
ஆண் : உன் பார்வை வடிக்கின்ற பாலோளியில்…
என் வானம் விடியுமடி…
உன் பாதம் படிகின்ற சிறு துகளில்…
என் ஆவி துடிக்குதடி…
ஆண் : கோபமா என்மேல் கோபமா…
ஆண் : என் மார்பு கீறடி பெண்ணே…
அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே…
என் மார்பு கீறடி பெண்ணே…
அதில் உன் முகம் தோன்றிடும் கண்ணே…
ஆண் : கண்கள் சாமரம் வீசிடுமா…
இல்லைக் காயத்தில் கத்தி வீசிடுமா…
ஆண் : கோபமா என்மேல் கோபமா…
—BGM—
ஆண் : நான் கண்களைத் தொலைத்துப் பிறந்திருந்தால்…
இந்தக் காதல் துயரமில்லை…
நீ இன்னொரு கிரகத்தில் பிறந்திருந்தால்…
இந்த ஏக்கம் சிறிதுமில்லை…
ஆண் : கோபமா என் மேல் கோபமா…
ஆண் : என் கண்ணில் ஏனடி வந்தாய்…
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்…
என் கண்ணில் ஏனடி வந்தாய்…
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்…
ஆண் : மெளனங்கள் மொழிகளின் வேசமம்மா…
மறுமொழி ஒன்று பேசிடம்மா…
ஆண் : கோபமா…
ஒரு மொழி பேசம்மா…
ஆண் : என் பாலைவனத்தில் உந்தன் பார்வையாறு…
வந்து பாய்ந்திடுமா…
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன் ஜீவன்…
மெல்ல ஓய்ந்திடுமா…
உள் உயிரே உருகுதம்மா… ஆ…
ஆண் : கோபமா என்மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…
கோபமா என்மேல் கோபமா…
பேசம்மா ஒரு மொழி பேசம்மா…
Notes : Kovama En Mel Kovama Song Lyrics in Tamil. This Song from Unnudan (1998). Song Lyrics penned by Vairamuthu. கோபமா என் மேல் பாடல் வரிகள்.
