குயிலுக்கு கூ கூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம், ஹரிஹரன் & ஷங்கர் மகாதேவன்இளையராஜாபிரண்ட்ஸ்

Kuyilikku Koo Koo Song Lyrics in Tamil


குழு : யே சிரிக்கும் கடலுல சேர முத்து சிதறுது…
யே யேயே யே யே…
விரிக்கும் வலையில மனசெல்லாம் விரியுது…
யே யே யே யே யே…

குழு : சோத்துக்கு பாடுபடும் ஏழைக்கொன்னும் இல்ல இல்ல…
சோகமாய் இருப்பதுக்கு பாடுனா தொல்லை இல்ல…
கைகளை கொட்டி கொட்டி சுத்தி சுத்தி கும்மி அடி…
யே யே யே யே யே…

BGM

ஆண் : குயிலுக்கு கூ கூ…
கூவிட சொல்லிக் கொடுப்போம்…
அட ஆமா…
மயிலுக்கு தை தை…
தாளங்கள் சொல்லிக் கொடுப்போம்…
அட ஆமா…

ஆண் : நதி நடந்து நடை பழகி…
கடலுடன் கலந்தது இந்நேரம்…
கடந்ததெல்லாம் மறந்துவிட்டு…
அலைகடல் இசையினில் விளையாடும்…

ஆண் : நீரை பிரிந்தாலும் வேராகிப் போகாது…
இன்பம் கரை மீற இனி என்றும் குறையாது…

ஆண் : குயிலுக்கு கூ கூ…
கூவிட சொல்லிக் கொடுப்போம்…
குழு : அட ஆமா…

ஆண் : மயிலுக்கு தை தை…
தாளங்கள் சொல்லிக் கொடுப்போம்…
குழு : அட ஆமா…

BGM

ஆண் : நிலவு வளரும் மலர்ந்து தளரும்…
அன்பில் ஏது தேய்பிறை…
அன்புக்கொரு எல்லை இல்லை கண்ணம்மா…

ஆண் : மலர்கள் உதிர கிளையில் குதிக்கும்…
குருவிக்கென்றும் விடுமுறை…
கொள்ளை இன்பம் நட்பில் உண்டு கண்ணம்மா…

ஆண் : வானில் திரண்ட மேகத்தின் மின்னல்…
வானை கிழிக்காது…
எங்கள் இடையில் யார் வந்த போதும்…
நெஞ்சம் பிரியாது…
துயர் போனது நேற்றோடு…
இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு…

ஆண் : குயிலுக்கு கூ கூ…
கூவிட சொல்லிக் கொடுப்போம்…
குழு : அட ஆமா…

ஆண் : மயிலுக்கு தை தை…
தாளங்கள் சொல்லிக்கொடுப்போம்…
குழு : அட ஆமா…

BGM

பெண் : அச்சுவெல்லம் பச்சரிசி சோறு…
குழு : அச்சுவெல்லம் பச்சரிசி சோறு…
பெண் : கருப்பஞ்சாறு தேன் கலந்து பாரு…
குழு : கருப்பஞ்சாறு தேன் கலந்து பாரு…

குழு : ஆடி வரும் அம்மனோட தேரு…
அம்மனுக்கு படையல் ஒன்னு போடு…
ஊர் செழிக்க ஒசந்து போகும் பேரு…

BGM

ஆண் : இதய வயலில் குளிர்ந்த காற்று…
இனிக்க இனிக்க வீசுதே…
விண்ணை தொட ரெக்கை கொடு குயிலே…

ஆண் : இரவு முழுதும் சிமிட்டும் விண்மீன்…
சிரிப்பு கதைகள் பேசுதே…
பக்கம் வந்து என்னை தொடு முகிலே…

ஆண் : ஜென்மம் நூறு என்றான போதும்…
சேர்ந்து பிறப்போமே…
தலையில் வானம் விழுகின்ற போதும்…
துயரம் மறப்போமே…

ஆண் : துயர் போனது நேற்றோடு…
இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு…

ஆண் : குயிலுக்கு கூ கூ…
கூவிட சொல்லிக் கொடுப்போம்…
அட ஆமா…
மயிலுக்கு தை தை…
தாளங்கள் சொல்லிக் கொடுப்போம்…
அட ஆமா…

ஆண் : நதி நடந்து நடை பழகி…
கடலுடன் கலந்தது இந்நேரம்…
கடந்ததெல்லாம் மறந்துவிட்டு…
அலைகடல் இசையினில் விளையாடும்…

ஆண் : நீரை பிரிந்தாலும் வேராகிப் போகாது…
இன்பம் கரை மீற இனி என்றும் குறையாது…

ஆண் : குயிலுக்கு கூ கூ…
கூவிட சொல்லிக்கொடுப்போம்…
குழு : அட ஆமா…
ஆண் : மயிலுக்கு தை தை…
தாளங்கள் சொல்லிக்கொடுப்போம்…
குழு : அட ஆமா…

ஆண் : குயிலுக்கு கூ கூ…
கூவிட சொல்லிக்கொடுப்போம்…
குழு : அட ஆமா…
ஆண் : மயிலுக்கு தை தை…
தாளங்கள் சொல்லிக்கொடுப்போம்…
குழு : அட ஆமா…


Notes : Kuyilikku Koo Koo Song Lyrics in Tamil. This Song from Friends (2001). Song Lyrics penned by Pazhani Bharathi. குயிலுக்கு கூ கூ பாடல் வரிகள்.