கங்கை நதியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாகாதலே நிம்மதி

Gangai Nathiye Song Lyrics in Tamil


குழு : லாலி லாலி லாலி லாலி…
லாலி லாலி லாலி லாலி…

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

BGM

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும்…
உந்தன் நிலை என்ன…
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்…
இந்த உறவென்ன…
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ…

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

BGM

ஆண் : முள்ளை ரசித்திருக்கும் உலகம்…
பூவை அறியாதே…
இருளில் வசித்திருக்கும் இதயம்…
நிழலை அறியாதே…

ஆண் : மூடு பனியினிலே இப்போது…
வழிகள் தெரியாதே…
வீசும் புயலினிலே அம்மம்மா…
தீபம் எரியாதே…

ஆண் : பாசம் துள்ளும் நெஞ்சில் இன்று…
ஓசை கிடையாதே…
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ…

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

BGM

குழு : லாலி லாலி லாலி லாலி…

ஆண் : விதியின் விளையாட்டு எப்போது…
முடியும் தெரியாதே…
விடியும் திசை என்ன இப்போது…
அதுவும் தெரியாதே…

ஆண் : நாளை எது வாழ்க்கை அன்பே நீ…
சொல்லி நடப்பாயோ…
பாசம் தாளாமல் அங்கேயும்…
உள்ளம் துடிப்பாயோ…

ஆண் : காலம் செய்த கோலம் என்று…
துன்பம் பொறுப்பாயோ…
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ…

BGM

ஆண் : கங்கை நதியே கங்கை நதியே…
போகும் வழி என்ன…
சின்னக் கிளியே தன்னந்தனியே…
பாடும் மொழி என்ன…

ஆண் : பாவமின்றி பழியைச் சுமக்கும்…
உந்தன் நிலை என்ன…
ஈரம் இன்றி இதயம் துடிக்கும்…
இந்த உறவென்ன…
சோகங்களே வாழ்க்கையின் வேதமோ…


Notes : Gangai Nathiye Song Lyrics in Tamil. This Song from Kaadhale Nimmadhi (1998). Song Lyrics penned by Pazhani Bharathi. கங்கை நதியே பாடல் வரிகள்.