கேளடி கண்மணி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபுது புது அர்த்தங்கள்

Keladi Kanmani Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…

ஆண் : நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்…
ஓர் கதையை உனக்கென நான் கூற…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…

—BGM—

ஆண் : எந்நாளும்தானே தேன் விருந்தாவது…
பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல்தான்…
இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா…
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்…

ஆண் : கானல் நீரால் தீராத தாகம்…
கங்கை நீரால் தீர்ந்ததடி…
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை…
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…

—BGM—

ஆண் : நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்…
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா…
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்…
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா…

ஆண் : ஏதோ ஏதோ ஆனந்த ராகம்…
உன்னால்தானே உண்டானது…
கால்போன பாதைகள் நான் போன போது…
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…
நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்…
ஓர் கதையை உனக்கென நான் கூற…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…


Notes : Keladi Kanmani Song Lyrics in Tamil. This Song from Pudhu Pudhu Arthangal (1989). Song Lyrics penned by Vaali. கேளடி கண்மணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading