சொல்லாமலே சொல்லாமலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசாய் விக்னேஷ்பி. அஜனீஷ் லோக்நாத்விரூபாக்ஷா

Sollamale Sollamale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சொல்லாமலே சொல்லாமலே…
உன் கண்கள் என் மீது கல் வீசுதே…
சொல்லாமலே சொல்லாமலே…
என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே…

ஆண் : சலசலக்கும் நீரும் நீயே…
படபடக்கும் தீயும் நீயே…
எதிரில் வரும் என்னை ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய்…
குறும்பு விழியாலே குடை சாய்த்து நீ போகின்றாய்…

—BGM—

ஆண் : சொல்லாமலே சொல்லாமலே…
உன் கண்கள் என் மீது கல் வீசுதே…

—BGM—

ஆண் : எங்கேயோ பார்த்தது போலே…
என் மனம் சொல்லுது உன்னை…
காலமும் காதலும் குழப்பம்தானோ…

ஆண் : பாவமாய் பாவனை காட்டும்…
திமிரு உன் தாவணி தோற்றம்…
நம்புதே நம்புதே நெஞ்சம் ஏனோ…

ஆண் : உண்மத்தமாய் நான் நிற்பது உன்னாலேதானோ…

ஆண் : சொல்லாமலே சொல்லாமலே…
உன் கண்கள் என் மீது கல் வீசுதே…

—BGM—

ஆண் : பார்த்ததும் புயலாய் தோன்றும்…
தென்றல் நீ தேவதை அம்சம்…
எண்ணிலே என்னவோ மாயம் செய்தாய்…

ஆண் : வார்த்தைகள் ஆயிரம் உண்டு…
ஆயினும் மௌனம் கொண்டு…
மனதை நீ முடினாய் ஏனோ இன்று…

ஆண் : ஓர் வார்த்தையில் உன் வாழ்வில்…
ஓரிடம் தாயானேன்…

ஆண் : சலசலக்கும் நீரும் நீயே…
படபடக்கும் தீயும் நீயே…
எதிரில் வரும் என்னை ஒரு பொம்மை போல் பார்க்கின்றாய்…
குறும்பு விழியாலே குடை சாய்த்து நீ போகின்றாய்…

—BGM—

ஆண் : சொல்லாமலே சொல்லாமலே…
உன் கண்கள் என் மீது கல் வீசுதே…
சொல்லாமலே சொல்லாமலே…
என் நெஞ்சம் உன்னோடு கை வீசுதே…


Notes : Sollamale Sollamale Song Lyrics in Tamil. This Song from Virupaksha (2023). Song Lyrics penned by Palani Bharathi. சொல்லாமலே சொல்லாமலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading