என்ன பெத்த அம்மாவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்ருத்ரன்

Enna Petha Ammave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்ன பெத்த அம்மாவே…
என்ன பெத்த அம்மாவே…
என்னவிட்டு எங்க போன ஏங்க வச்ச அம்மாவே…

ஆண் : என்ன பெத்த அம்மாவே…
என்ன பெத்த அம்மாவே…
என்னவிட்டு எங்க போன ஏங்க வச்ச உன் மவன…

ஆண் : பெத்து என்ன வளத்தவதான் இத்துப்போயே கிடக்கிறியே…
பேச்சும் மூச்சும் ஓய்ஞ்சுகிடக்கியே…
தாலாட்டும் தொட்டில் சேல சாயம் விட்டு போகவில்லை…
தாலாட்டு பாடுனவ சாயம்விட்டு போயிட்டியே…

ஆண் : நூல் சேல கட்டி நின்னு வழி அனுப்பி வச்சவளே…
பட்டு சேல வாங்கி வந்தேன் விழி மயங்கி கிடக்கியே…

—BGM—

ஆண் : கருவில் தாங்கி கனவில் ஏங்கி…
கதறி ஈன்ற தியாக உருவமே…
சில நொடி பிடிச்சி பிஞ்சு மனம் பொதச்சி…
உன் நிழலில் நடிக்க மறு ஜென்மம் தோன்றுமா…

ஆண் : ஊராரு மெச்ச உன்ன…
நான் அழ வைக்கதானே…
ஏழேழு கடலும் தாண்டி வந்தேன்…

ஆண் : மூச்சோடு மல்லுகட்டி என்ன பெத்தவளே…
முந்தான கூண்டில் வச்சி பாதுகாத்தவளே…
தானக துடிச்ச நெஞ்சு என்ன நினச்சுதோ…
கைமாறு என்ன செஞ்சு பாவம் தீர்ப்பதோ…

ஆண் : என்ன பெத்த அம்மாவே…
என்ன பெத்த அம்மாவே…

—BGM—

ஆண் : தகப்பன் தோள்கள் தாங்கிட இல்லை…
தாயின் மடியும் தூங்க இல்லையம்மா…
தன்னந்தனி மரமா நிக்க வச்ச நீயே…
தாய் இழந்த மகனா பாட வச்சிட்டியே…

ஆண் : தாயே உன் கதகதப்பில்…
பனிக்குட வெது வெதுப்பில்…
நான் வாழ பிறவி வாய்க்குமா…

ஆண் : ஊர் கூடி தேர் இழுத்தும் தெய்வம் காணவில்ல…
முக்கோடி சில இருந்தும் தாய மிஞ்சவில்லை…
பேராடி சொத்து சேர்த்தும் இன்பம் சேரவில்லை…
தாயே நீ இல்லாமத்தான் மோட்சம் எனக்கு இல்லை…

ஆண் : என்ன பெத்த அம்மாவே…
என்ன பெத்த அம்மாவே…
என்னவிட்டு எங்க போன ஏங்க வச்ச உன் மவன…

ஆண் : என்ன பெத்த அம்மாவே…
என்ன பெத்த அம்மாவே…
என்ன விட்டு எங்க போன ஏங்க வச்ச உன் மவன…

ஆண் : பெத்து என்ன வளத்தவதான் இத்துப்போயே கிடக்கிறியே…
பேச்சும் மூச்சும் ஓய்ஞ்சுகிடக்கியே…
தாலாட்டும் தொட்டில் சேல சாயம் விட்டு போகவில்லை…
தாலாட்டு பாடுனவ சாயம் விட்டு போயிட்டியே…

ஆண் : நூல் சேல கட்டி நின்னு வழி அனுப்பி வச்சவளே…
பட்டு சேல வாங்கி வந்தேன் விழி மயங்கி கிடக்கியே…


Notes : Enna Petha Ammave Song Lyrics in Tamil. This Song from Rudhran (2023). Song Lyrics penned by Madhurakavi. என்ன பெத்த அம்மாவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading