பூபாளம் இசைக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன்இளையராஜாதூறல் நின்னுபோச்சு

Bhoopalam Isaikkum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே…

பெண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே…

பெண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…

—BGM—

ஆண் : மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே…
மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே…

பெண் : நாயகன் ஜாடை நூதனமே…
நாணமே பெண்ணின் சீதனமே…

ஆண் : மேகமழை நீராட தோகை மயில் வாராதோ…

பெண் : தித்திக்கும் இதழ் முத்தங்கள்…
அது நன நன நன நன நா…

ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே…

ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…

—BGM—

பெண் : பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா…
பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா…

ஆண் : மன்மதன் கோவில் தோரணமே…
மார்கழி திங்கள் பூ முகமே…

பெண் : நாளும் இனி சங்கீதம்…
ஆடும் இவள் பூந்தேகம்…

ஆண் : அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்…
நன நன நன நன நா…

பெண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே…

ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…


Notes : Bhoopalam Isaikkum Song Lyrics in Tamil. This Song from Thooral Ninnu Pochu (1982). Song Lyrics penned by Muthulingam. பூபாளம் இசைக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading