பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன்ஏ.ஆர்.ரகுமான்ரிதம்

Nadhiye Nadhiye Song Lyrics in Tamil


ஆண் : தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

BGM

ஆண் : நதியே நதியே
காதல் நதியே
நீயும் பெண்தானே…
அடி நீயும் பெண்தானே…

ஒன்றா இரண்டா
காரணம் நூறு
கேட்டால் சொல்வேனே…
நீ கேட்டால் சொல்வேனே…

ஆண் : தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

நடந்தால் ஆறு
எழுந்தால் அருவி
நின்றால் கடல்லோ… ஓஓ…

சமைந்தால் குமரி
மணந்தால் மனைவி
பெற்றால் தாயல்லோ…

சிறு நதிகளே
நதியிடும் கரைகளே…
கரைதொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே…

சிறு நதிகளே
நதியிடும் கரைகளே…
கரைதொடும் நுரைகளே
நுரைகளில் இவள் முகமே…

BGM

குழு (ஆண்கள்) : தினம் மோதும்
கரை தோறும்
அட ஆறும்
இசை பாடும்….

குழு (பெண்கள்) : ஜில் ஜில் ஜில்
என்ற ஸ்ருதியிலே…

குழு (ஆண்கள்) :- கங்கை வரும்
யமுனை வரும்
வைகை வரும்
பொருணை வரும்…

குழு (பெண்கள்) : ஜல் ஜல் ஜல்
என்ற நடையிலே…

BGM

குழு (ஆண்கள்) : தினம் மோதும்
கரை தோறும்
அட ஆறும்
இசை பாடும்…

குழு (பெண்கள்) : ஜில் ஜில் ஜில்
என்ற ஸ்ருதியிலே….

குழு (ஆண்கள்) :- கங்கை வரும்
யமுனை வரும்
வைகை வரும்
பொருணை வரும்…

குழு (பெண்கள்) : ஜல் ஜல் ஜல்
என்ற நடையிலே…

ஆண் : காதலி அருமை பிரிவில்
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய்..
கோடையிலே….

வெட்கம் வந்தால் உறையும்
விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று
வாடையிலே….

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்…
ஓஹோ…
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…
ஓஹோ…

BGM

ஆண் : தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்…
ஓஹோ…
தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…
ஓஹோ…

ஆண் : தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

ஆண் : வண்ண வண்ண பெண்ணே
வட்டமிடும் நதியே…
வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு…

ஹோ….

ஆண் : மெல்லிசைகள் படித்தல்
மேடு பள்ளம் மறைத்தல்…
நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே…

சிறு நதிகளே…
நதியிடும் கரைகளே…
கரைதொடும் நுரைகளே…
நுரைகளில் இவள் முகமே….

சிறு நதிகளே…
நதியிடும் கரைகளே….
கரைதொடும் நுரைகளே…
நுரைகளில் இவள் முகமே…

BGM

குழு (பெண்கள்) : தினம் மோதும்
கரை தோறும்
அட ஆறும்
இசை பாடும்…

BGM

குழு (பெண்கள்) : கங்கை வரும்
யமுனை வரும்
வைகை வரும்
பொருணை வரும்…

BGM

ஆண் : தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

ஆண் : தீங்கனியில் சாராகி
பூக்களிலே தேனாகி…
பசுவினிலே பாலாகும் நீரே…

தாயருகே சேயாகி
தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும் பெண்ணே…

ஆண் : பூங்குயிலே… பூங்குயிலே…
பெண்ணும் ஆறும்
வடிவம் மாறக்கூடும்…

நீர் நினைத்தால்
பெண் நினைத்தால்
கரைகள் யாவும்
கரைந்து போக கூடும்…

நதியே நதியே
காதல் நதியே
நீயும் பெண்தானே…

அடி நீயும் பெண்தானே…

ஆண் : ஒன்றா இரண்டா
காரணம் நூறு…
கேட்டால் சொல்வேனே…
நீ கேட்டால் சொல்வேனே…

தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா…

BGM


Notes : Nadhiye Nadhiye Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu.