பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார் & ஸ்ரேயா கோஷல்டி.இமான்நம்ம வீட்டு பிள்ளை

Mailaanji Song Lyrics in Tamil


BGM

ஆண் : மயிலாஞ்சி… மயிலாஞ்சி…
மாமன் ஓன்… மயிலாஞ்சி…
கையோடும்… காலோடும்…
பூசேன்டி… என ஆஞ்சி…

பெண் : கண்ணாடி போல
காதல் உன்ன காட்ட…
ஈரேழு லோகம்
பாத்து நிக்குறேன்…

ஆண் : கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க…
காத்தாடியாக
நானும் சுத்துறேன்…

பெண் : சதா சதா
சந்தோஷமாகுறேன்…
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்…

BGM

குழு (ஆண்கள்) : பறக்குறேன்… பறக்குறேன்…
தெரிஞ்சுக்கடி…

பெண் : ஓ.. ஓ..

குழு (ஆண்கள்) : உனக்கு நான்… எனக்கு நீ…
புரிஞ்சுக்கடி…

பெண் : மயிலாஞ்சி… மயிலாஞ்சி…
மாமா நீ… மயிலாஞ்சி…

ஆண் : கையோடும்… காலோடும்…
பூசேன்டி என ஆஞ்சி…

BGM

ஆண் : ஏ… ஏ… ஹே…

BGM

குழு (ஆண்கள்) : பறக்குறேன்… பறக்குறேன்…
தெரிஞ்சுக்கடி…
உனக்கு நான்… எனக்கு நீ…
புரிஞ்சுக்கடி…

பெண் : கோயில் மணியோச
கொலுசோட கலந்து பேச…
மனசே தாவுகின்றதே…

ஆண் : தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்த போல…
உசுரே ஊறுகின்றதே…

பெண் : விளக்கும் கூட
வெள்ளி நிலவாக…
தெரியும் கோலம் என்னவோ…ஓ… ஓ…

ஆண் : கணக்கில்லாம
வந்து விடும் காதல்…
குழப்பும் செய்தி அல்லவோ…

பெண் : அழகா நீ பேசும் தமிழ…
அறிஞ்சா ஓடாதோ கவல…
உன்ன நான் தாலாட்டவேனே… மனகூட்டுல…

ஆண் : மயிலாஞ்சி… மயிலாஞ்சி…
மாமன் ஓன்… மயிலாஞ்சி…
கையோடும்… காலோடும்…
பூசேன்டி என ஆஞ்சி…

பெண் : பல்லாக்கு போல நீயும்
என்ன தூக்கி…
தேசாதி தேசம் போக எண்ணுற…

ஆண் : வெள்ளாட்டு மேல
பட்டுபூச்சி போல…
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்…

பெண் : சதா சதா
சந்தோஷமாகுறேன்…

ஆண் : மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்…

பெண் : நூறாகுறேன்…

குழு (ஆண்கள்) : பறக்குறேன்… பறக்குறேன்…
தெரிஞ்சுக்கடி…

பெண் : ஆ… ஆ…

குழு (ஆண்கள்) : உனக்கு நான்… எனக்கு நீ…
புரிஞ்சுக்கடி…

பெண் : மயிலாஞ்சி… மயிலாஞ்சி…
மாமா நீ… மயிலாஞ்சி…
கையோடும்… காலோடும்…
சேத்தேனே… உன்ன ஆஞ்சி…

BGM


Notes : Mailaanji Song Lyrics in Tamil. This Song from Namma Veettu Pillai (2019). Song Lyrics penned by Yugabharathi.


Namma Veettu Pillai