Category Archives: அமர்க்களம்

என் செய்தாயோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்அமர்க்களம்

En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் செய்தாயோ விழியே…
இனி என் செய்வாயோ விதியே…
ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை…
பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை…
பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே…

ஆண் : ஒரு சொந்தம் இல்லாத தந்தை…
சுய பந்தம் இல்லாத அன்னை…
இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே…

ஆண் : விதை மண்ணில் முளை கொண்ட போதே…
அதன் தலையில் இடி வீழ்த்தது என்ன…
இனி வாழ்ந்து பயன் என்ன என்ன விதியே…

BGM


Notes : En Seithayo Vidhiyeh Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. என் செய்தாயோ பாடல் வரிகள்.


சொந்த குரலில் பாட

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷாலினிபரத்வாஜ்அமர்க்களம்

Sontha Kuralil Song Lyrics in Tamil


BGM

பெண் : தராரராரா தராரராரா…
தராரராரா தராரராரா…

பெண் : ம்ம்ம்ம்… சொந்த குரலில் பாட…
ம்ம்ம்ம்… ரொம்ப நாளா ஆசை…
ஹலோ சுசிலா ஆண்ட்டி…
ஹல்லோ ஜானகி ஆண்ட்டி…
குயில் பாட்டு சித்ரா…
எல்லோரும் என்னை மன்னியுங்கள்…

பெண் : தராரராரா தராரராரா…
தராரராரா தராரராரா…

பெண் : ம்ம்ம்ம்… சொந்த குரலில் பாட…
தராரராரா…
ம்ம்ம்ம்… ரொம்ப நாளா ஆசை…
தராரராரா…

BGM

பெண் : காற்றில் ஏறி பாட்டு பாட போகிறேன்…
ஒரு கானம் பாடி வானம்பாடியாகிறேன்…
வெண்ணிலாவில் தண்ணீருண்டு கேட்கிறேன்…
நிலாவில் சென்று நீர் அருந்த போகிறேன்…

பெண் : மூன்று லோகம் கண்டு வாழப் போகிறேன்…
முன்னூறு ஆண்டு இளமை வாங்க போகிறேன்…

பெண் : தராரராரா தராரராரா…
குழு : ஹே ஹே ஹே…
பெண் : தராரராரா தராரராரா…
குழு : ஹே ஹே ஹே…

பெண் : ம்ம்ம்ம்… சொந்த குரலில் பாட…
குழு : சா சா சா சா…
பெண் : ம்ம்ம்ம்… ரொம்ப நாளா ஆசை…

BGM

பெண் : இந்த பூமி பழைய பூமி அல்லவா…
ஒரு புதிய பூமி சலவை செய்து கொண்டு வா…
ஆதி மனிதன் நல்ல மனிதன் அல்லவா…
ஒரு ஜாதியற்ற மனித ஜாதி கொண்டுவா…

பெண் : உலகம் தூங்க ஒற்றை படுக்கை கொண்டு வா…
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா…
உலகம் தூங்க ஒற்றை படுக்கை கொண்டு வா…
அங்கு உறங்க வைக்கும் எந்தன் பாடல் அல்லவா…

பெண் : தராரராரா தராரராரா…
தராரராரா தராரராரா…

பெண் : ம்ம்ம்ம்… சொந்த குரலில் பாட…
சொந்த குரலில் பாட…
ம்ம்ம்ம்… ரொம்ப நாளா ஆசை…
ரொம்ப நாளா ஆசை…

பெண் : ஹலோ சுசிலா ஆண்ட்டி…
ஹலோ ஜானகி ஆண்ட்டி…
குயில் பாட்டு சித்ரா…
எல்லோரும் என்னை மன்னியுங்கள்…

பெண் : தராரராரா தராரராரா…
தராரராரா தராரராரா…
தராரராரா தராரராரா…
தராரராரா தராரராரா…

BGM


Notes : Sontha Kuralil Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. சொந்த குரலில் பாட பாடல் வரிகள்.


உன்னோடு வாழாத

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராபரத்வாஜ்அமர்க்களம்

Unnodu Vazhadha Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…
என் உள்நெஞ்சு சொல்கின்றது…
பூவோடு பேசாத காற்றென்ன காற்று…
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது…

பெண் : மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்…
எந்தன் பெண்மை பூப்பூக்கவே…
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்…
நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில்…
ன்னை ஏந்தத்தானோ…

பெண் : உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…
என் உள்நெஞ்சு சொல்கின்றது…

BGM

பெண் : மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது…
முரடா உனை ரசித்தேன்…
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது…
கர்வம் அதை மதித்தேன்…

பெண் : முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ…
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ…
உன்னைப் போலே ஆண் இல்லையே…
நீயும் போனால் நான் இல்லையே…
நீர் அடிப்பதாலே மீன் நழுவ வில்லையே…
ஆம் நமக்குள் ஊடலில்லை…

பெண் : உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…
என் உள்நெஞ்சு சொல்கின்றது…
பூவோடு பேசாத காற்றென்ன காற்று…
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது…

BGM

பெண் : நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன்…
அன்பே தீயாய் இரு…
நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா…
அன்பே முள்ளாய் இரு…

பெண் : நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது…
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது…
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்…
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்…

பெண் : நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை…
காதலோடு பேதம் இல்லை…

பெண் : உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…
என் உள்நெஞ்சு சொல்கின்றது…
பூவோடு பேசாத காற்றென்ன காற்று…
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது…

பெண் : மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்…
எந்தன் பெண்மை பூப்பூக்கவே…
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்…
நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில்…
என்னை ஏந்தத்தானோ…

BGM


Notes : Unnodu Vazhadha Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. உன்னோடு வாழாத பாடல் வரிகள்.


Kaalam Kalikalam Song Lyrics in Tamil

காலம் கலிகாலம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்அமர்க்களம்

Kaalam Kalikalam Song Lyrics in Tamil


BGM

ஆண் : காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா…

BGM

ஆண் : கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா…

ஆண் : ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது…
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது…

ஆண் : டப்பு மட்டும் வச்சிருந்தா போதும்…
நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்…

ஆண் : பொய்யும் சத்தியம் செய்யும்…
இந்த பூமி எப்படி உய்யும்…

ஆண் : இத பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட…
பக்தி குறையுது…
வினை தீர்க்க வந்த சாமி கூட…
ஆத்தில் கரையுது…

குழு : மஹாகணபதி… மஹாகணபதி…
மஹாகணபதி… மஹாகணபதி…

BGM

ஆண் : கண்ணகிக்கு கோயில் கட்டும்…
கற்பு மிக்க நாடிது…
கற்புன்னா எத்தன லிட்டர்…
புதுப்பொண்ணு கேட்குது…

BGM

ஆண் : அட சேல பாவாட அது மலையேறிப்போச்சு…
மிடியோடு சுடிதாரும் பொது உடையாகிப்போச்சு…
போழி புண்ணாக்கு பள்ளி எதுக்கு…
டிடி தந்தாலே பட்டம் இருக்கு…

ஆண் : ஏட்டில் உள்ளது ஒழுக்கம்…
அந்து ரோட்டில் வந்ததும் வழுக்கும்…

ஆண் : இத பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட…
பக்தி கொறையுது…
வினை தீர்க்க வந்த சாமி கூட…
ஆத்தில் கரையுது…

குழு : மஹாகணபதி… மஹாகணபதி…
அண்ணனுக்கு ஜே…
காதல் மன்னனுக்கு ஜே…
மரத் தமிழனுக்கு ஜே…
நம்ம தலைவனுக்கு ஜே ஜே…
தலைவனுக்கு ஜே ஜே…
தலைவனுக்கு ஜே ஜே…

BGM

ஆண் : திரையில பொய்கள சொன்னா…
சாதிசனம் நம்புது…
கருத்துள்ள கவிஞன் சொன்னா…
காத தூரம் ஓடுது…

BGM

ஆண் : அட சத்துள்ள தானியம்…
அது காணாமப் போச்சு…
வெறும் பொக்குள்ள அரிசி…
பொது உணவாகிப் போச்சு…

ஆண் : பாசம் கண்ணீரு பழைய தொல்ல…
தாயே செத்தாலும் அழுவதில்ல…
அட ஏழுகுண்டலவாட…
இது இன்னைக்குத் திருந்தும் நாடா…

ஆண் : இத பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட…
பக்தி கொறையுது…
வினை தீர்க்க வந்த சாமி கூட…
ஆத்தில் கரையுது…

குழு : மஹாகணபதி… மஹாகணபதி…

ஆண் : காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா…

BGM

ஆண் : கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா…

BGM

ஆண் : ஆம்பளையே தெரியாம கொழந்த பொறக்குது…
பொம்பளைங்க சேர்ந்து இங்க குடும்பம் நடக்குது…

ஆண் : டப்பு மட்டும் வச்சிருந்தா போதும்…
நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்…

ஆண் : பொய்யும் சத்தியம் செய்யும்…
இந்த பூமி எப்படி உய்யும்…

ஆண் : இத பாக்கப் பாக்க மனுஷன் கொண்ட…
பக்தி குறையுது…
வினை தீர்க்க வந்த சாமி கூட…
ஆத்தில் கரையுது…

குழு : மஹாகணபதி… மஹாகணபதி…
மஹாகணபதி… மஹாகணபதி…

BGM


Notes : Kaalam Kalikalam Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. காலம் கலிகாலம் பாடல் வரிகள்.


மேகங்கள் என்னைத் தொட்டு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்பரத்வாஜ்அமர்க்களம்

Megangal Ennai Thottu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

BGM

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

ஆண் : தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு…
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு…
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்…
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை…

ஆண் : ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல…
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை…

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

BGM

ஆண் : பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே…
என் பிரியத்தை அதனால் குறைக்கமாட்டேன்…
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே…
என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்…

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

BGM

ஆண் : கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்…
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்…
துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம்…
அடி தூயவளே உனக்குள் தொலைத்துவிட்டேன்…

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

BGM

ஆண் : செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே…
அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்…
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்…
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்…

ஆண் : எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன்…
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்…
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்…
என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்…

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

BGM

ஆண் : மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்…
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி…
ஓடி ஓடிப் போகாதே ஊமை பெண்ணே…
நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி…

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

ஆண் : தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு…
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு…
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்…
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை…

ஆண் : ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல…
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை…


Notes : Megangal Ennai Thottu Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. மேகங்கள் என்னைத் தொட்டு பாடல் வரிகள்.


சத்தம் இல்லாத

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்பரத்வாஜ்அமர்க்களம்

Satham Illatha Song Lyrics in Tamil


பெண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…

பெண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…

BGM

ஆண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…

ஆண் : உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்…
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்…
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்…
வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்…

ஆண் : இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்…
இளமை கெடாத மோகம் கேட்டேன்…
பறந்து பறந்து நேசம் கேட்டேன்…
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்…

ஆண் : புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்…
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்…
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்…
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்…

ஆண் : நிலவில் நனையும் சோலை கேட்டேன்…
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்…
நடந்து போக நதிக்கரை கேட்டேன்…
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்…

ஆண் : தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்…
எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன்…
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்…
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்…

ஆண் : பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்…
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்…
மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்…
பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்…

ஆண் : உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்…
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்…
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்…
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்…

ஆண் : எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்…
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்…
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்…
காமம் கடந்த யோகம் கேட்டேன்…

ஆண் : சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்…
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்…
உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன்…
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்…

ஆண் : பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்…
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்…
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்…
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்…

ஆண் : மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்…
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்…
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்…
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்…

ஆண் : விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்…
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்…
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்…
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்…

ஆண் : பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்…
சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன்…
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்…
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்…

ஆண் : பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்…
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்…
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்…
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்…

ஆண் : சொந்த உழைப்பில் சோறை கேட்டேன்…
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்…
மழையைப் போன்ற பொறுமையை கேட்டேன்…
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்…
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்…

ஆண் : இடியைத் தாங்கும் தோளை கேட்டேன்…
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்…
துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன்…
தொலைந்து விடாத பொறுமையை கேட்டேன்…

ஆண் : சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்…
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்…
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்…
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்…

ஆண் : சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன்…
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்…
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்…
போலியில்லாத புன்னகை கேட்டேன்…

ஆண் : தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்…
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்…
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்…
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்…

ஆண் : காசே வேண்டாம் கருணை கேட்டேன்…
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்…
கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்…
குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்…

ஆண் : இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை…
இதிலே எதுவும் நடக்கவில்லை…
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று…
மரணம் மரணம் மரணம் கேட்டேன்…


Notes : Satham Illatha Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. சத்தம் இல்லாத பாடல் வரிகள்.