Category Archives: டூயட்

டூயட்

வெண்ணிலாவின் தேரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. ஜே. யேசுதாஸ்ஏ.ஆர்.ரகுமான்டூயட்

Vennilavin Theril Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி…
காதல் தெய்வம் நேரில் வந்தாளே…
மானம் உள்ள ஊமை போல…
தானம் கேட்க கூசி நின்றேனே…

ஆண் : நிறம் கண்டு முகம் கண்டா…
நேசம் கொண்டேன்…
அவள் நிழல் கண்டு நிழல் கண்டே…
நான் பாசம் கொண்டேன்…

ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி…
காதல் தெய்வம் நேரில் வந்தாளே…

BGM

ஆண் : அட கை நீட்டும் தம்பியே…
எனை கட்டிவைத்தாள் அன்னையே…
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே…

BGM

ஆண் : அட கை நீட்டும் தம்பியே…
எனை கட்டிவைத்தாள் அன்னையே…
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே…

ஆண் : நிறம் கண்டு முகம் கண்டா…
நேசம் கொண்டேன்…
அவள் நிழல் கண்டு நிழல் கண்டே…
நான் பாசம் கொண்டேன்…

BGM

ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி…
காதல் தெய்வம் நேரில் வந்தாளே…

BGM

ஆண் : கால் அழகு மேல் அழகு…
கண் பொங்க கண்டேன்…
அவள் நூல் அவிழும் இடை அழகை…
நோகாமல் தின்பேன்…

ஆண் : கத்தி மூக்கில் காதல் நெஞ்சை…
காயம் செய்து மாயம் செய்தாளே…

BGM

ஆண் : அட கை நீட்டும் தம்பியே…
எனை கட்டிவைத்தாள் அன்னையே…
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே…

ஆண் : அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு…
சீப்பாக இருப்பேன்…
இல்லை செந்தாமரை பாதத்தில்…
செருப்பாக பிறப்பேன்…

ஆண் : அண்டமெல்லாம் விண்டு போகும்…
கொண்ட காதல் கொள்கை மாறாது…

-BGM


Notes : Vennilavin Theril Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலாவின் தேரில் பாடல் வரிகள்.


மெட்டுப்போடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஏ.ஆர்.ரகுமான்டூயட்

Mettu Podu Song Lyrics in Tamil


பெண் : ஆய கலைகள் அறுபத்துநான்கினையும்…
ஏய உணர்விக்கும் எண்ணம்மை…
தூய உரு பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே…
இருப்பள் இங்கு வாராது இடர்…

பெண் : படிக நிறமும் பவளச் செவ்வாயும்…
கடிகமழ் பூந்தாமரை போற் கையும்…
துடியிடையும் அல்லும் பகலும் அனவரதமும்…
துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி…

ஆண் : தானா தான நானா தன்னன் நானா…
தர தான நானா தான நானா தன்னன் நானா…

BGM

ஆண் : தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு…

BGM

ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்…
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்…
அத்தனையும் சூடங்காட்டி சுட்டுப் போடு…

ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு…
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
மெட்டுப்போடு மெட்டுப்போடு…
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு…

ஆண் : தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு…

ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்…
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்…
அத்தனையும் சூடங்காட்டி சுட்டுப் போடு…

ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
மெட்டுப்போடு மெட்டுப்போடு…
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு…

BGM

ஆண் : இது மக்கள் பாட்டு தன்மான பாட்டு…
இது போராடும் உங்கள் வாழ்க்கை பாட்டு…

BGM

ஆண் : கல்லூரி பெண்கள் பாடும் கன்னி பாட்டு…
சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு…

ஆண் : நாம் கட்டும் பாட்டு ஈரம் தட்டும் பாட்டு…
கட்டிச் செந்தேனாய் நெஞ்சில் சொட்டும் பாட்டு…
தாய் பாலைப்போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு…
தமிழ் மக்கள் வீட்டை சென்று தட்டும் பாட்டு…

ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு…
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
மெட்டுப்போடு மெட்டுப்போடு…
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு…

BGM

ஆண் : இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க…
எங்கள் கானங்கள் கேட்டு காதல் செய்க…

BGM

ஆண் : நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க…
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க…

ஆண் : நம் பூமி மேலே புது பார்வை கொள்க…
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க…
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க…
பாறைக்குள் வேரை போலே வெற்றி கொள்க…

ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு…
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
மெட்டுப்போடு மெட்டுப்போடு…
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு…

ஆண் : தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு…

ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்…
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்…
அத்தனையும் சூடங்காட்டி சுட்டுப் போடு…

ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு…
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
மெட்டுப்போடு மெட்டுப்போடு…
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு…

BGM


Notes : Mettu Podu Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. மெட்டுப்போடு பாடல் வரிகள்.


kulicha-kuthalam-song-lyrics-in-tamil

குளிச்சா குத்தாலம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & டி.கே. கலாஏ. ஆர். ரகுமான்டூயட்

Kulicha Kuthalam Song Lyrics in Tamil


BGM

ஆண் : குளிச்சா குத்தாலம்…
கும்பிட்டா பரமசிவம்…
குடிச்சா நீர்மோரு…
புடிச்சா நீதாண்டி…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…
சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…

ஆண் : குளிச்சா குத்தாலம்…
கும்பிட்டா பரமசிவம்…
குடிச்சா நீர்மோரு…
புடிச்சா நீதாண்டி…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…
சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…

BGM

பெண் : குளத்துக்கு தாமரப்பூ…
கும்மிக்கு குமரிப்பொண்ணு…
வீட்டுக்கு முருங்க மரம்…
வெய்யிலுக்கு வேப்ப மரம்…

பெண் : குளத்துக்கு தாமரப்பூ…
கும்மிக்கு குமரிப்பொண்ணு…
வீட்டுக்கு முருங்க மரம்…
வெய்யிலுக்கு வேப்ப மரம்…

ஆண் : கூழுக்கு மோர் மொளகா…
கூதலுக்கு சுடு சோறு…
நடிச்சா எங்கப்பன்…
அணைச்சா நீதாண்டி…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…
சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…

பெண் : குளிச்சா குத்தாலம்…
கும்பிட்டா பரமசிவம்…
குடிச்சா நீர் மோரு…
புடிச்சா நீதான்யா…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…

BGM

ஆண் : தமிழுக்கு தென்மதுர…
தாவாணிக்கு பாவாடை…
மாட்டுக்கு பருத்தி விதை…
மனைவிக்கு மல்லிகைப்பூ…

ஆண் : தமிழுக்கு தென்மதுர…
தாவாணிக்கு பாவாடை…
மாட்டுக்கு பருத்தி விதை…
மனைவிக்கு மல்லிகைப்பூ…

பெண் : சிரிப்புக்கு என். எஸ். கே…
சிந்தனைக்கு வள்ளுவரு…
இன்னதுக்கு இன்னதுன்னு…
எழுதிவச்ச பொருத்தம் இது…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…
சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…

ஆண் : குளிச்சா…
பெண் : குத்தாலம்…
ஆண் : கும்பிட்டா…
பெண் : பரமசிவம்…
ஆண் : குடிச்சா…
பெண் : நீர்மோரு…
ஆண் : புடிச்சா…
பெண் : நீதான்யா…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…
சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…

ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…
சொக்குப்பொடி மீனாட்சி…
சொக்கநாதன் நான்தாண்டி…


Notes : Kulicha Kuthalam Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. குளிச்சா குத்தாலம் பாடல் வரிகள்.


கத்திரிக்கா கத்திரிக்கா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன்ஏ. ஆர். ரகுமான்டூயட்

Kathirikka Kathirikka Song Lyrics in Tamil


BGM

பெண் : கத்திரிக்கா கத்திரிக்கா…
குண்டு கத்திரிக்கா…

குழு : கத்திரிக்கா கத்திரிக்கா…
கத்திரி குண்டு கத்திரிக்கா…

பெண் : கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும்…
காதல் பேரிக்கா…

குழு : கத்திரிக்கா கத்திரிக்கா…
க க க க காதல் பேரிக்கா…

BGM

பெண் : கத்திரிக்கா கத்திரிக்கா…
குண்டு கத்திரிக்கா…
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும்…
காதல் பேரிக்கா…

பெண் : எந்த கடையில…
நீ அரிசி வாங்குற…
உன் அழகுல என்…
உசுர வாங்குற…

பெண் : உம்மை எடை அளவு…
பாக்கனும் பாக்கனும்…
உச்சந்தலைக்கு மேல…
தூக்கனும் தூக்கனும்…
அழகனே எனக்கு மூச்சு முட்டனும்…

பெண் : கத்திரிக்கா கத்திரிக்கா…
குண்டு கத்திரிக்கா…
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும்…
காதல் பேரிக்கா…

பெண் : எந்த கடையில…
நீ அரிசி வாங்குற…
உன் அழகுல என்…
உசுர வாங்குற…

பெண் : உம்மை எடை அளவு…
பாக்கனும் பாக்கனும்…
உச்சந்தலைக்கு மேல…
தூக்கனும் தூக்கனும்…
அழகனே எனக்கு மூச்சு முட்டனும்…

BGM

பெண் : எடை பார்க்கும் மிஷின்ன கண்டு…
எங்கள் ஐயா ஏறி நிற்க…
கூட்டமா ஏறாதேன்னு…
சீட்டு வந்துச்சாம்…

பெண் : இங்கிலாந்து போகும் போது…
ஏரோபிளைன் ஏறும் போது…
டிக்கெட் ரெண்டு வாங்க சொல்லி…
நோட்டிஸ் வந்துச்சாம்…

பெண் : ஆந்திராவில் நீ பொறந்தால்…
குண்டூரு பொண்ணு வேணும்…
தமிழ் நாட்டில் பொறந்ததனால்…
வத்தல குண்டு பெண் வேணும்…

பெண் : பஞ்சத்தில் காதல் கொள்ள…
உன்னை போல ஆள்தான் வேணும்…

பெண் : கத்திரிக்கா கத்திரிக்கா…
குண்டு கத்திரிக்கா…
கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும்…
காதல் பேரிக்கா…

BGM

குழு : கத்திரிக்கா…
குண்டு குண்டு கத்திரிக்கா…
கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா…

குழு : கத்திரிக்கா குண்டு குண்டு கத்திரிக்கா…
கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா…

குழு : கத்திரிக்கா…
குண்டு குண்டு கத்திரிக்கா…
குண்டு கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா…

BGM

பெண் : குண்டான உடம்பு இழைக்க…
குதிரை சவாரி செஞ்சா…
குதிரைதான் இழைச்சு போச்சாம்…
சொன்னாங்க வீட்டில்…

பெண் : ஒத்தயில நீ நடந்தா…
ஊர்வலம் போகுதுன்னு…
ஊருக்குள் பேச்சிருக்கு…
போகாதே ரோட்டில்…

பெண் : கொழு கொழு தேகத்தில்…
கொடி போல பின்னட்டா…
குழி விழும் கன்னத்தில்…
குடித்தனம் பண்ணட்டா…

பெண் : மஞ்சத்தில் மெத்தை வேண்டாம்…
மார்பில் சாய்ந்து தூங்கட்டா…

பெண் : கத்திரிக்கா கத்திரிக்கா…
குண்டு கத்திரிக்கா…

குழு : கத்திரிக்கா கத்திரிக்கா…
கத்திரி குண்டு கத்திரிக்கா…

பெண் : கண்ணம் ரெண்டும் கிள்ள சொல்லும்…
காதல் பேரிக்கா…

குழு : கத்திரிக்கா கத்திரிக்கா…
க க க க காதல் பேரிக்கா…

பெண் : எந்த கடையில…
நீ அரிசி வாங்குற…
உன் அழகுல…
என் உசுர வாங்குற…

பெண் : உம்மை எடை அளவு…
பாக்கனும் பாக்கனும்…
உச்சந்தலைக்கு மேல…
தூக்கனும் தூக்கனும்…
அழகனே எனக்கு மூச்சு முட்டனும்…

பெண் : கத்திரிக்கா கத்திரிக்கா…
குண்டு… ம்ம் ம்ம்… ம்ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்… ம்ம்ம்ம்… ம்ம்ம்…


Notes : Kathirikka Kathirikka Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. கத்திரிக்கா கத்திரிக்கா பாடல் வரிகள்.


என் காதலே (ஆண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்டூயட்

En Kadhale (Male) Song Lyrics in Tamil


ஆண் : லவ் இஸ் டார்ச்சர்…
வேர்ட்ஸ் கான்ட் ஜஸ்ட் எக்ஸ்பிரஸ்…
லவ் இஸ் கேம்பல்…
வித் டியர்ஸ் ஆஃப் பெயின்…
இன் லைஃப்ஸ் டிஸ்ட்ரஸ்…
லவ் மேக் யுவர் லைஃப் எ ஸ்ட்ரயின்…
வேர் மனி ஸ்டாண்ட்ஸ்…
டூ லூஸ் தி கேம்…
லவ் ஹேஸ் திஸ் கிரேஸி நேம்…
வேர் பெயின் அண்ட் ஸாரோ…
டை டவுன் இன் ஷேம்…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : சிலுவைகள் சிறகுகள்…
ரெண்டில் என்ன தர போகிறாய்…

BGM

ஆண் : கிள்ளுவதை கிள்ளி விட்டு…
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : காதலே நீ பூ எறிந்தால்…
எந்த மலையும் கொஞ்சம் குழையும்…
காதலே நீ கல் எறிந்தால்…
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்…

ஆண் : இனி மீள்வதா… ஆஅ…
இல்லை வீழ்வதா…
உயிர் வாழ்வதா… ஆஅ…
இல்லை போவதா…
அமுதென்பதா விஷம் என்பதா…
உன்னை அமுதவிஷமென்பதா…

BGM

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : காதலே உன் காலடியில்…
நான் விழுந்து விழுந்து தொழுதேன்…
கண்களை நீ மூடிக்கொண்டால்…
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்…

ஆண் : இது மாற்றமா… ஆஅ…
தடுமாற்றமா…
என் நெஞ்சிலே… ஏ…
பனி மூட்டமா…
நீ தோழியா இல்லை எதிரியா…
என்று தினமும் போராட்டமா…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

ஆண் : சிலுவைகள் சிறகுகள்…
ரெண்டில் என்ன தர போகிறாய்…
கிள்ளுவதை கிள்ளிவிட்டு…

BGM


Notes : En Kadhale (Male) Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. என் காதலே (ஆண்) பாடல் வரிகள்.


அஞ்சலி அஞ்சலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்டூயட்

Anjali Anjali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—

ஆண் : காதல் வந்து தீண்டும் வரை…
இருவரும் தனி தனி…
காதலின் பொன் சங்கிலி…
இணைத்தது கண்மணி…

ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின்…
எந்த துளி மழைத் துளி…
காதலில் அது போல நான்…
கலந்திட்டேன் காதலி…

ஆண் : திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்…
தினமொரு புதுப் பாடல் படித்துவிட்டேன்…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…

ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

பெண் : ஹ்ம்ம்… அஹா…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஆஅ… ஆ… ஆஅ… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஆ… ஆஅ…
ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஆ…

பெண் : சீதையின் காதல் அன்று…
விழி வழி நுழைந்தது…
கோதையின் காதல் இன்று…
செவி வழி புகுந்தது…

பெண் : என்னவோ என் நெஞ்சிலே…
இசை வந்து துளைத்தது…
இசை வந்த பாதை வழி…
தமிழ் மெல்ல நுழைந்தது…

பெண் : இசை வந்த திசை பார்த்து…
மனம் குழைந்தேன்…
தமிழ் வந்த திசை பார்த்து…
உயிர் கசிந்தேன்…
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி…

பெண் : அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி…
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி…
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி…
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—

ஆண் : அழகியே உனை போலவே…
அதிசயம் இல்லையே…
அஞ்சலி பேரைச் சொன்னேன்…
அவிழ்ந்தது முல்லையே…

ஆண் : கார்த்திகை மாதம் போனால்…
கடும் மழை இல்லையே…
கண்மணி நீயில்லையேல்…
கவிதைகள் இல்லையே…

ஆண் : நீயென்ன நிலவோடு பிறந்தவளா…
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…

ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—


Notes : Anjali Anjali Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. அஞ்சலி அஞ்சலி பாடல் வரிகள்.