என் காதலே (ஆண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்டூயட்

En Kadhale (Male) Song Lyrics in Tamil


ஆண் : லவ் இஸ் டார்ச்சர்…
வேர்ட்ஸ் கான்ட் ஜஸ்ட் எக்ஸ்பிரஸ்…
லவ் இஸ் கேம்பல்…
வித் டியர்ஸ் ஆஃப் பெயின்…
இன் லைஃப்ஸ் டிஸ்ட்ரஸ்…
லவ் மேக் யுவர் லைஃப் எ ஸ்ட்ரயின்…
வேர் மனி ஸ்டாண்ட்ஸ்…
டூ லூஸ் தி கேம்…
லவ் ஹேஸ் திஸ் கிரேஸி நேம்…
வேர் பெயின் அண்ட் ஸாரோ…
டை டவுன் இன் ஷேம்…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : சிலுவைகள் சிறகுகள்…
ரெண்டில் என்ன தர போகிறாய்…

BGM

ஆண் : கிள்ளுவதை கிள்ளி விட்டு…
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : காதலே நீ பூ எறிந்தால்…
எந்த மலையும் கொஞ்சம் குழையும்…
காதலே நீ கல் எறிந்தால்…
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்…

ஆண் : இனி மீள்வதா… ஆஅ…
இல்லை வீழ்வதா…
உயிர் வாழ்வதா… ஆஅ…
இல்லை போவதா…
அமுதென்பதா விஷம் என்பதா…
உன்னை அமுதவிஷமென்பதா…

BGM

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : காதலே உன் காலடியில்…
நான் விழுந்து விழுந்து தொழுதேன்…
கண்களை நீ மூடிக்கொண்டால்…
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்…

ஆண் : இது மாற்றமா… ஆஅ…
தடுமாற்றமா…
என் நெஞ்சிலே… ஏ…
பனி மூட்டமா…
நீ தோழியா இல்லை எதிரியா…
என்று தினமும் போராட்டமா…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

ஆண் : சிலுவைகள் சிறகுகள்…
ரெண்டில் என்ன தர போகிறாய்…
கிள்ளுவதை கிள்ளிவிட்டு…

BGM


Notes : En Kadhale (Male) Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. என் காதலே (ஆண்) பாடல் வரிகள்.


Scroll to Top