அஞ்சலி அஞ்சலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்டூயட்

Anjali Anjali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காதல் வந்து தீண்டும் வரை…
இருவரும் தனி தனி…
காதலின் பொன் சங்கிலி…
இணைத்தது கண்மணி…

ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின்…
எந்த துளி மழைத் துளி…
காதலில் அது போல நான்…
கலந்திட்டேன் காதலி…

ஆண் : திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்…
தினமொரு புதுப் பாடல் படித்துவிட்டேன்…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…

ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

பெண் : ஹ்ம்ம்… அஹா…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஆஅ… ஆ… ஆஅ… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஆ… ஆஅ…
ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஆ…

பெண் : சீதையின் காதல் அன்று…
விழி வழி நுழைந்தது…
கோதையின் காதல் இன்று…
செவி வழி புகுந்தது…

பெண் : என்னவோ என் நெஞ்சிலே…
இசை வந்து துளைத்தது…
இசை வந்த பாதை வழி…
தமிழ் மெல்ல நுழைந்தது…

பெண் : இசை வந்த திசை பார்த்து…
மனம் குழைந்தேன்…
தமிழ் வந்த திசை பார்த்து…
உயிர் கசிந்தேன்…
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி…

பெண் : அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி…
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி…
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி…
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—

ஆண் : அழகியே உனை போலவே…
அதிசயம் இல்லையே…
அஞ்சலி பேரைச் சொன்னேன்…
அவிழ்ந்தது முல்லையே…

ஆண் : கார்த்திகை மாதம் போனால்…
கடும் மழை இல்லையே…
கண்மணி நீயில்லையேல்…
கவிதைகள் இல்லையே…

ஆண் : நீயென்ன நிலவோடு பிறந்தவளா…
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…

ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—


Notes : Anjali Anjali Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. அஞ்சலி அஞ்சலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading