வெண்ணிலாவின் தேரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. ஜே. யேசுதாஸ்ஏ.ஆர்.ரகுமான்டூயட்

Vennilavin Theril Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி…
காதல் தெய்வம் நேரில் வந்தாளே…
மானம் உள்ள ஊமை போல…
தானம் கேட்க கூசி நின்றேனே…

ஆண் : நிறம் கண்டு முகம் கண்டா…
நேசம் கொண்டேன்…
அவள் நிழல் கண்டு நிழல் கண்டே…
நான் பாசம் கொண்டேன்…

ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி…
காதல் தெய்வம் நேரில் வந்தாளே…

—BGM—

ஆண் : அட கை நீட்டும் தம்பியே…
எனை கட்டிவைத்தாள் அன்னையே…
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே…

—BGM—

ஆண் : அட கை நீட்டும் தம்பியே…
எனை கட்டிவைத்தாள் அன்னையே…
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே…

ஆண் : நிறம் கண்டு முகம் கண்டா…
நேசம் கொண்டேன்…
அவள் நிழல் கண்டு நிழல் கண்டே…
நான் பாசம் கொண்டேன்…

—BGM—

ஆண் : வெண்ணிலாவின் தேரில் ஏறி…
காதல் தெய்வம் நேரில் வந்தாளே…

—BGM—

ஆண் : கால் அழகு மேல் அழகு…
கண் பொங்க கண்டேன்…
அவள் நூல் அவிழும் இடை அழகை…
நோகாமல் தின்பேன்…

ஆண் : கத்தி மூக்கில் காதல் நெஞ்சை…
காயம் செய்து மாயம் செய்தாளே…

—BGM—

ஆண் : அட கை நீட்டும் தம்பியே…
எனை கட்டிவைத்தாள் அன்னையே…
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே…

ஆண் : அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு…
சீப்பாக இருப்பேன்…
இல்லை செந்தாமரை பாதத்தில்…
செருப்பாக பிறப்பேன்…

ஆண் : அண்டமெல்லாம் விண்டு போகும்…
கொண்ட காதல் கொள்கை மாறாது…

—-BGM—


Notes : Vennilavin Theril Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. வெண்ணிலாவின் தேரில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading