மெட்டுப்போடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஏ.ஆர்.ரகுமான்டூயட்

Mettu Podu Song Lyrics in Tamil


பெண் : ஆய கலைகள் அறுபத்துநான்கினையும்…
ஏய உணர்விக்கும் எண்ணம்மை…
தூய உரு பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே…
இருப்பள் இங்கு வாராது இடர்…

பெண் : படிக நிறமும் பவளச் செவ்வாயும்…
கடிகமழ் பூந்தாமரை போற் கையும்…
துடியிடையும் அல்லும் பகலும் அனவரதமும்…
துதித்தால் கல்லும் சொல்லாதோ கவி…

ஆண் : தானா தான நானா தன்னன் நானா…
தர தான நானா தான நானா தன்னன் நானா…

BGM

ஆண் : தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு…

BGM

ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்…
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்…
அத்தனையும் சூடங்காட்டி சுட்டுப் போடு…

ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு…
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
மெட்டுப்போடு மெட்டுப்போடு…
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு…

ஆண் : தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு…

ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்…
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்…
அத்தனையும் சூடங்காட்டி சுட்டுப் போடு…

ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
மெட்டுப்போடு மெட்டுப்போடு…
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு…

BGM

ஆண் : இது மக்கள் பாட்டு தன்மான பாட்டு…
இது போராடும் உங்கள் வாழ்க்கை பாட்டு…

BGM

ஆண் : கல்லூரி பெண்கள் பாடும் கன்னி பாட்டு…
சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு…

ஆண் : நாம் கட்டும் பாட்டு ஈரம் தட்டும் பாட்டு…
கட்டிச் செந்தேனாய் நெஞ்சில் சொட்டும் பாட்டு…
தாய் பாலைப்போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு…
தமிழ் மக்கள் வீட்டை சென்று தட்டும் பாட்டு…

ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு…
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
மெட்டுப்போடு மெட்டுப்போடு…
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு…

BGM

ஆண் : இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க…
எங்கள் கானங்கள் கேட்டு காதல் செய்க…

BGM

ஆண் : நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க…
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க…

ஆண் : நம் பூமி மேலே புது பார்வை கொள்க…
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க…
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க…
பாறைக்குள் வேரை போலே வெற்றி கொள்க…

ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு…
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
மெட்டுப்போடு மெட்டுப்போடு…
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு…

ஆண் : தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு…

ஆண் : எத்தனை சபைகள் கண்டோம்…
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்…
அத்தனையும் சூடங்காட்டி சுட்டுப் போடு…

ஆண் : மெட்டுப்போடு மெட்டுப்போடு…
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
மெட்டுப்போடு மெட்டுப்போடு…
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு…

BGM


Notes : Mettu Podu Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. மெட்டுப்போடு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top