Pachchai Thee Song Lyrics in Tamil

பச்சைத் தீ நீயடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகார்த்திக் & தாமினிஎம்.எம். கீரவாணிபாகுபலி

Pachchai Thee Song Lyrics in Tamil


BGM

பெண் : பச்சைத் தீ நீயடா…
கச்சைப் பூ நானடா…
ஒற்றைப் பாா்வை கொண்டே…
பற்றிக் கொண்டாயடா…

BGM

பெண் : வெற்றுக் கல் நானடா…
வெட்டும் உளி நீயடா…
அற்பப் பாறை என்னில்…
சிற்பம் செய்தாயடா…

ஆண் : நீயே மண் மின்னும் வெண்தாரகை…
உள்ளங்கை சோ்ந்தப் பூந்தாாிகை…
கைகள் நாம் கோா்க்கச் சிறகாகுமே…
புது வானங்கள் உருவாகுமே…

பெண் : பச்சைத் தீ நீயடா…
கச்சைப் பூ நானடா…
ஒற்றைப் பாா்வை கொண்டே…
பற்றிக் கொண்டாயடா…

BGM

ஆண் : மான் விழிக்குள் எந்தன்…
வாழ் ஒன்றைக் காண…
மாமலை ஒன்றேறி வந்தேனடி…

பெண் : இதயம் ஒன்று உள்ளதென்று…
உன் அழைப்பாலே கண்டேனே…
இனும் எனை இறுக்கி…
அணைத்திடத் துடித்தேனே…

ஆண் : நீயே மண் மின்னும் வெண்தாரகை…
தோளில் வீழ்கின்ற பூந்தாாிகை…
உந்தன் தோளோடு தோள் சோ்க்கிறேன்…
என்னில் தோகைகள் நான் பாா்க்கிறேன்…

பெண் : பச்சைத் தீ நீயடா…
கச்சைப் பூ நானடா…
ஒற்றைப் பாா்வை கொண்டே…
பற்றிக் கொண்டாயடா…

BGM

ஆண் : கீறலில் உண்டாகும் கீதங்கள் கேட்டால்…
மோதலின் மோகங்கள் கேட்டாயடி…

பெண் : பிறவி பல எடுத்தாலும்…
நிகழும் கணம் நான் மறவேனே…
வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே…

ஆண் : நீயே மண் மின்னும் வெண்தாரகை…
கண்ணில் தேன் சிந்தும் பூந்தாாிகை…
உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன்…
காதல் ஆழத்தை நான் காண்கிறேன்…

பெண் : பச்சைத் தீ நீயடா…
கச்சைப் பூ நானடா…
ஒற்றைப் பாா்வை கொண்டே…
பற்றிக் கொண்டாயடா…

பெண் : வெற்றுக் கல் நானடா…
வெட்டும் உளி நீயடா…
அற்பப் பாறை என்னில்…
சிற்பம் செய்தாயடா…


Notes : Pachchai Thee Song Lyrics in Tamil. This Song from Baahubali (2015). Song Lyrics penned by Madhan Karky. பச்சைத் தீ நீயடா பாடல் வரிகள்.