உழவா உழவா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஶ்ரீராம் & யோகி பிடி. இமான்பூமி

Uzhavaa Song Lyrics in Tamil


ஆண் : உழவா… உழவா…
உலகை உழ வா…
புதியதாய் உலகைப் படைக்க…
எழுந்திடு தலைவா…

ஆண் : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
புதியதாய் உலகைப் படைக்க…
எழுந்திடு தலைவா எழு தலைவா…

—BGM—

ஆண் : பாட்டனை பூட்டனை உனக்குள்ளே பூட்டிடு…
மண்ணெணும் தாய் இவள் உயிரினை ஈட்டிடு…
மரபனு யாவிழும் உழவென தீட்டிடு…
நாம் இனி யார் என எதிரிக்கு காட்டிடு…

ஆண் : விதை நெல்லாய் நீ உருமாற…
அஞ்சாதே வா வா…

ஆண் : வா வா…

ஆண் : உரம் இங்கே நெஞ்சுரம் தானே…
கை கோர்த்து வா வா…

ஆண் : வா வா…

ஆண் : உதிரத்தை நீரெனப் பாய்ச்ச…
என்னோடு வா வா…

ஆண் : கம் வித் மீ…

ஆண் : விரல் எல்லாம் ஏரென மாற…
மண் மாற்ற வா வா…

ஆண் : பிணியென பரவிடும் வளர்ச்சியை…
உன் அறிவினில் அழிக்க வா…

ஆண் : வா வா…

ஆண் : புதிதொரு வயல்வெளி புரட்சியை…
இந்த நொடியினில் தொடங்க வா…

குழு (ஆண்கள்) : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
புதியதாய் உலகைப் படைக்க…
எழுந்திடு தலைவா எழு தலைவா…

குழு (ஆண்கள்) : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
இளைஞன் நினைத்தால் முடியும்…
முடிவெடு தலைவா எடு தலைவா…

ஆண் : ஆடியும் பாடியும் உழைத்திட்ட நம் இனம்…
கணினியில் திரையினில் சிறை பட்டுக் கிடப்பதா…
உழவனின் கட்டுடல் உழைத்திட கிடக்கையில்…
விசைப் பொறி தரையினில் மனிதர்கள் நடப்பதா…

ஆண் : ஓ… உலகின் முதல் பேரறிவாளன்…
நீதானே வா வா…

ஆண் : கம் ஆன்…

ஆண் : தரையில் கால் வைத்திடும் தேவதை…
நீதானே வா வா…

ஆண் : லெட்ஸ் கோ…

ஆண் : ஐம்பூதம் உடன் வரும் தோழன்…
நீதானே வா வா…

ஆண் : நீதான்…

ஆண் : பசி ஆற்றி மகிழ்கிற தாயும்…
நீதானே வா வா…

ஆண் : நரம்பினில் தெரிகிற பசுமையை…
இந்த வயல்களில் இறக்க வா…
நெழிந்திடும் புழுக்களின் சகதியில்…
இளம் சரித்திரம் செதுக்க வா…

குழு (ஆண்கள்) : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
புதியதாய் உலகைப் படைக்க…
எழுந்திடு தலைவா எழு தலைவா…

குழு (ஆண்கள்) : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
இளைஞன் நினைத்தால் முடியும்…
முடிவெடு தலைவா எடு தலைவா…

—BGM—

ஆண் : உழவு என்பது…
ஒரு பொழுது போக்கு இல்லை…
விளையும் பயிரும் உழவன் உயிரும்…
உனக்கு ஆட்டமே…

ஆண் : உனது அரசியல் எமக்குத் தேவையில்ல…
இளைஞர் உழுது இணையும் பொழுது…
பெருகும் ஈட்டமே…

ஆண்: இனி ஒரு உயிரும் வீணாய்…
அழிந்திட விட மாட்டோம்…
மருத்துவம் சட்டம் பொறியியல் போர்…
உளவியல் தொழில் நுட்பமும் மாறும்…

—BGM—

ஆண் : உடல் அழிக்கும் பாணம் விற்க்க…
எங்கள் நீரை விற்றது யாரடா…
புகை உமிழும் ஆலைக்காக…
எங்கள் மண்ணை விற்ப்பதாரடா…

ஆண் : இலவசம் மின்சாரம் வேண்டாம்…

குழு (ஆண்கள்) : வேண்டாம்…

ஆண் : ஒளியினில் மின்சாரம் காண்போம்…

குழு (ஆண்கள்) : காண்போம்…

ஆண் : கடன்களை நீ நீக்க வேண்டாம்…

குழு (ஆண்கள்) : வேண்டாம்…

ஆண் : உழைப்பினில் எல்லாமே தீர்ப்போம்…

குழு (ஆண்கள்) : தீர்ப்போம்…

குழு (ஆண்கள்) : வா வா மண்ணை ஆள உழவனே…

ஆண் : வா வா உழவா…

குழு (ஆண்கள்) : நீதான் உண்மை பச்சைத் தமிழனே…

ஆண் : பச்சைத் தமிழா வா வா…

குழு (ஆண்கள்) : நிலம் கிழித்திடும்…
உந்தன் தோளின் ஏரோடு எதிரிகளின்…
முகம் கிழித்திட ஒன்றாய் கூடி போராடு…

குழு (ஆண்கள்) : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
புதியதாய் உலகைப் படைக்க…
எழுந்திடு தலைவா எழு தலைவா…

குழு (ஆண்கள்) : உழவா உழவா உழவா…
உலகை உழ வா…
இளைஞன் நினைத்தால் முடியும்…
முடிவெடு தலைவா எடு தலைவா…

ஆண் : உழவா உழவா உழ வா…

ஆண் : உலகை உழ வா…

ஆண் : புதிதாய் உலகைப் படைக்க…

ஆண் : எழுந்திடு தலைவா எழு தலைவா…


Notes : Uzhavaa Song Lyrics in Tamil. This Song from Bhoomi (2021). Song Lyrics penned by Madhan Karky. உழவா உழவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading