தமிழன் என்று சொல்லடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர், டி. இமான் & லாவண்யா சுந்தரராமன்டி. இமான்பூமி

Tamizhan Endru Sollada Song Lyrics in Tamil


பெண் : ஆ… ஆ… ஆ….
ஆ… ஆ… ஆ… னா…
ஆ… ஆ… ஆ…
ஆ… னா…
ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ…

ஆண் : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

ஆண் : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…..

—BGM—

ஆண் : ஹேய்…

—BGM—

ஆண் : பூமி எங்கும் சுற்றி வந்தேன்…
விண்ணைத் தொட்டும்…
வந்தேனே…
இந்த மண்ணில் ஏதோ ஒன்று…

ஆண் : வேற்று மொழி…
சொற்கள் எல்லாம்…
கேட்டுக் கொண்டே வந்தேனே…
என் தமிழில்…
ஏதோ ஒன்று…

ஆண் : பிரிந்திடும் வரை…
இதன் பெருமைகள் எதுவும்…
அறிந்திடவில்லை…
நெஞ்சம்…

ஆண் : மறுபடி பாதத்தினை…
நான் பதிக்கும் பொழுது…
சிலிர்க்குது தேகம் கொஞ்சம்…

ஆண் : நரம்புகள் அனைத்திலும்…
அறம் எனும் உரம்தான்…
உலகத்தின் முதல் நிறம்…
தமிழ் நிறம்தான்…

ஆண் : ஏழு கோடி முகம் ஆனால்…
ஒரே ஒரு பெயர்தான்…
அது வெறும் பெயர் இல்லை…
எங்கள் உயிர்தான்…

குழு (ஆண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

குழு (ஆண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை வெல்லடா… ஆ…

ஆண் : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…

ஆண் : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

ஆண் : பீசா பர்கர் உண்டு வந்தேன்…
பாஸ்தா தின்றும் வந்தேனே…
இட்டிலியில் ஏதோ ஒன்று…

ஆண் : ஏதோ ஒன்று…

ஆண் : ராக் அண்ட் ரோல்…
கேட்டு வந்தேன்…
ஜாஸ்சில் மூழ்கி வந்தேனே…
நம் பறையில்…
ஏதோ ஒன்று…

ஆண் : ஏதோ ஒன்று…

ஆண் : உறவுகள்…
என்னும் சொல்லின்…
அர்த்தம் கண்டுபிடிக்க…
வேறு இடம்…
மண்ணில் இல்லை…

ஆண் : ஏ மொழி வெறும்…
ஒலி இல்லை…
வழி என்று உரைத்த…
வேறு இனம்…
எங்கும் இல்லை…

ஆண் : நரம்புகள் அனைத்திலும்…
அறம் எனும் உரம்தான்…
உலகத்தின் முதல் நிறம்…
தமிழ் நிறம்தான்…

ஆண் : ஏழு கோடி முகம் ஆனால்…
ஒரே ஒரு பெயர்தான்…
அது வெறும் பெயர் இல்லை…
எங்கள் உயிர்தான்…

குழு (ஆண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

குழு (ஆண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

—BGM—

ஆண் : கோட்டு அதக் கலட்டி விட்டு…
பேன்ட்டு அதக் கொளுத்திப்புட்டு…
வேட்டியை மடிச்சுக்கட்டு…
தக்கிட தக்கிட தக்கிட தக்கிட…

ஆண் : சகதியில் கால விட்டு…
நாத்து நட்டு தாளம் இட்டு…
எட்டு கட்டப் பாட்டு கட்டு…
தக்கிட தக்கிட தக்கிட தக்கிட…

—BGM—

ஆண் : ஆயிரம் ஆண்டின் முன்னே…
சித்தர் சொன்னதெல்லாமே…
இன்றுதான் நாசா சொல்லும்…

ஆண் : நிலவை முத்தமிட்டு…
விண்கலத்தில் ஏறி தமிழோ…
விண்ணைத் தாண்டி வெல்லும்…

குழு (ஆண்கள்) : கிழவிகள்…
மொழி…
அனுபவ உளி…

ஆண் : அதில் உண்டு…
பூமிப் பந்தின்…
மொத்த அறிவு…

குழு (ஆண்கள்) : குமரிகள்…
விழி…
சிதறிடும் ஒளி…

ஆண் : அதில் உண்டு…
பூமிப் பந்தின்…
மொத்த அழகு…

ஆண் : ஏழு கோடி இதயத்தில்…
ஒரே துடிப்பு…
எங்கள் விழிகளில்…
எரிவது ஒரே நெருப்பு…

ஆண் : உலகினில் ஒளி தர…
அதைப் பரப்பு…
இந்த இனத்தினில்…
பிறப்பதே தனிச் சிறப்பு…

குழு (ஆண்கள்) : தமிழன்…
என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

குழு (ஆண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா… ஆ…

ஆண் : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…

ஆண் : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…

—BGM—


Notes : Tamizhan Endru Sollada Song Lyrics in Tamil. This Song from Bhoomi (2020). Song Lyrics penned by Madhan Karky. தமிழன் என்று சொல்லடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading