எள்ளு வயப் பூக்கலயே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்அசுரன்

Ellu Vaya Pookalaye Song Lyrics in Tamil


BGM

பெண் : எள்ளு வயப் பூக்கலயே…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்பு…
கொத்துதய்யா…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா…

பெண் : கொல்லையில வாழ எல…
கொட்டடியில் கோழிக்குஞ்சு…
அத்தனையும் உன் மொகத்த…
சொல்லுதய்யா… ஆ…
ஆடும் மாடும் வெறும் வாய…
மெள்ளுதய்யா…

பெண் : காத்தோட உன் வாசம்…
காடெல்லாம் ஒம் பாசம்…
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே…
ஊறுதய்யா… ஆ… ஆ…
சால்சாப்பு வேணாம்…
வந்து நில்லய்யா… ஆ…
சாவையும் கூறு போட்டுக்…
கொல்லய்யா… ஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கல்லாக நின்னாயோ…
கால் நோக நின்னாயோ…
கண்ணே…
நீ திரும்பி வரணும்…
வீட்டுக்கு…

பெண் : மல்லாந்து போனாலும்…
மண்ணோடு சாஞ்சாலும்…
அய்யா… நீ பெரும…
சாதி சனத்துக்கு…

பெண் : தலைச்சம் புள்ள இல்லாம…
சரிஞ்சது எத்தன ஆட்சி…
நீயே… எங்க ராசா…
வா வா களத்துக்கு…
தாயோட பாரம் மாசம்…
பத்தய்யா… ஆ…
தாங்காம நீயும் போனா…
தப்பய்யா… ஆ…

பெண் : எள்ளு வயப் பூக்கலயே…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்பு…
கொத்துதய்யா… ஆ…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா… ஆ…

BGM

பெண் : வாள் ஏந்தி வந்தாலும்…
வாழாமச் செத்தாலும்…
கம்பீரம் கொறைஞ்சிடாத…
நெருப்பு நீ…

பெண் : அய்யோன்னு போனாலும்…
ஆகாசம் போனாலும்…
தண்ணீர கொளத்தில் சேர்க்கும்…
வரப்பு நீ…

பெண் : உழைக்க எண்ணுற ஆள…
உதைச்சி தள்ளுற ஊர…
கையக் கால…
வெட்டி வீசும்…
கருப்பு நீ…
காட்டேரி உன்னக் கண்டா…
ஓடாதோ… ஓ…
காப்பாத்த தெய்வம் வந்து…
சேராதோ…

பெண் : எள்ளு வயப் பூக்கலயே… ஏ…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்புக்…
கொத்துதய்யா… ஆ…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா…

பெண் : கொல்லையில வாழ எல…
கொட்டடியில் கோழிக்குஞ்சு…
அத்தனையும் உன் மொகத்த…
சொல்லுதய்யா… ஆ…
ஆடும் மாடும் வெறும் வாய…
மெள்ளுதய்யா…

பெண் : காத்தோட உன் வாசம்…
காடெல்லாம் ஒம் பாசம்…
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே…
ஊறுதய்யா… ஆ… ஆ…
சால்சாப்பு வேணாம்…
வந்து நில்லய்யா… ஆ…
சாவையும் கூறு போட்டுக்…
கொல்லய்யா…

BGM


Notes : Ellu Vaya Pookalaye Song Lyrics in Tamil. This Song from Asuran (2019). Song Lyrics penned by Yugabharathi. எள்ளு வயப் பூக்கலயே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading