கத்தரி பூவழகி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கே. ஏகாதேசிவேல்முருகன், ராஜலக்ஷ்மி & நெப்போலியாஜி. வி. பிரகாஷ் குமார்அசுரன்

Kathari Poovazhagi Song Lyrics in Tamil


ஆண் : தன்னே நன்னானே… தன்னே நன்னானே…
தன்னே நன்னானே… தன்னே நன்னானே….
தன்னே நன்னானே… தன்னே நன்னானே…
தன்னே நன்னானே… தன்னே நன்னானே…

—BGM—

ஆண் : கத்தரி பூவழகி…
கரையா பொட்டழகி…
கலரு சுவையாட்டம்…
உன்னோட நெனப்பு… அடியே…
சொட்டாங்கல்லு ஆடையில…
புடிக்குது கிறுக்கு…

பெண் : வரப்பு மீசைக்காரா…
வத்தாத ஆசைக்காரா…
உன்ன நான் கட்டிக்குறேன்…
ஊரு முன்னால…
அட வெக்கப்பட வேணா…
என்ன பாரு கண்ணால…

ஆண் : தன்னே நன்னானே…
தன்னே நன்னானே…

—BGM—

ஆண் : மையால கண்ணெழுதி…
என் வாலிபத்த மயக்குறியே…

பெண் : காத்தாடி போல நானும்…
உன்ன நிக்காம சுத்துறேனே… ஏ… ஏ…

ஆண் : கழுதை போலத்தான்…
அழக சுமக்காத…
எனக்கு தாயேண்டி…
கொஞ்ச வேணும் நானும்…

ஆண் & பெண் : அருவா போல நீ…
மொறப்பா நடக்குறியே…
திருடா… மொரடா…
இருப்பேன் உன்னோடதான்…

—BGM—

ஆண் : ஹேய்… கத்தரி பூவழகி…
கரையா பொட்டழகி…
கலரு சுவையாட்டம்…
உன்னோட நெனப்பு… அடியே…
சொட்டாங்கல்லு ஆடையில…
புடிக்குது கிறுக்கு…

பெண் : ஹான் ஹான் ஆன்…
வரப்பு மீசைக்காரா…
வத்தாத ஆசைக்காரா…
உன்ன நான் கட்டிக்குறேன்…
ஊரு முன்னால…
அட வெக்கப்பட வேணா…
என்ன பாரு கண்ணால…

ஆண் : தன்னே நன்னானே… தன்னே நன்னானே…
தன்னே நன்னானே… தன்னே நன்னானே…
தன்னே நன்னானே… தன்னே நன்னானே…
தன்னே நன்னானே… தன்னே நன்னானே…

ஆண் : ஏ… தன்னேநன்னே தன்னேநன்னே …
தன்னே நன்னானே…
தன்னேனன்நன்னே தன்னேனன்நன்னே…
தன்னே நன்னானே…

—BGM—

ஆண் : கரகாட்டம் ஆடுது நெஞ்சு…
உன்ன கண்டாலே தெருவுல நின்னு…

பெண் : நான் குளிக்கும்…
தாமிரபரணி…
கண் தூங்காம…
வாங்குன வரம் நீ…

ஆண் : ஆலம் விழுதாட்டம்…
அடடா தலமயிரு…
தூளி ஆடிடத்தான்…
தோது செஞ்சு தாடி…
இலவம் பஞ்சுல…
நீ ஏத்துற விளக்கு திரி…
பத்திக்கும் தித்திக்கும்…
அணைச்சா நிக்காதடி…

—BGM—

ஆண் : ஹேய் ஹேய்…
கத்தரி பூவழகி…
கரையா பொட்டழகி…
கலரு சுவையாட்டம்…
உன்னோட நெனப்பு… அடியே…
சொட்டாங்கல்லு ஆடையில…
புடிக்குது கிறுக்கு…

பெண் : ஹான் ஹான் ஹான்…
வரப்பு மீசைக்காரா…
வத்தாத ஆசைக்காரா…
உன்ன நான் கட்டிக்குறேன்…
ஊரு முன்னால…
அட வெக்கப்பட வேணா…
என்ன பாரு கண்ணால…

—BGM—


Notes : Kathari Poovazhagi Song Lyrics in Tamil. This Song from Asuran (2019). Song Lyrics penned by K. Ekadesi. கத்தரி பூவழகி பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading