சரட்டு வண்டில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிப்பு, நிகிதா காந்தி & ஏ. ஆா். ரெய்ஹனாஏ. ஆர். ரகுமான்காற்று வெளியிடை

Saarattu Vandiyila Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…

—BGM—

பெண் : உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…

—BGM—

பெண் : சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…

பெண் : உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…

ஆண் : அடி வெத்தலபோட்ட…
உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு…
நான் கொடுத்த கடன…
திருப்பிக் கொடுக்க…
சத்தியம் பண்ணிக்குடு…
என் இரத்தம் சூடு கொள்ள…
பத்து நிமிசம் தான்…
ராசாத்தி…

குழு (பெண்கள்) : ஆணுக்கோ…
பத்து நிமிசம்… ஹா…
பொண்ணுக்கோ… அஞ்சு நிமிசம் ஹா…
பொதுவா சண்டித்தனம் பண்ணும்…
ஆம்பளைய பொண்ணு…
கிண்டி கெழங்கெடுப்பா…

குழு (ஆண்கள்) : சேலைக்கு சாயம்
போகு மட்டும்…
உன்ன நான் வெளுக்க வேணுமடி…
பாடுபட்டு விடியும் பொழுது…
வெளியில் சொல்ல…
பொய்கள் வேணுமடி…

குழு (ஆண்கள்) : புது பொண்ணே… ஏ…
அதுதாண்டி தமிழ் நாட்டு பாணி…

குழு (பெண்கள்) : சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…

குழு (பெண்கள்) : உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…

குழு (பெண்கள்) : சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…

குழு (பெண்கள்) : உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…

—BGM—

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : வெக்கத்தையே…
கொழச்சி கொழச்சி…
குங்குமம் பூசிக்கோடி…
ஆசையுள்ள வோ்வையப் போல்…
வாசம் ஏதடி…

குழு (பெண்கள்) : ஏ… பூங்கொடி…
வந்து தேன் குடி…

குழு (ஆண்கள் & பெண்கள்) : அவன் கைகளில்…
உடையட்டும்… கண்ணி கண்ணாடி…

குழு (பெண்கள்) : கத்தாழங்காட்டுக்குள்…
மத்தாளம் கேக்குது…
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்…
குத்தாலச் சாரலே…
முத்தானப் பன்னீரு…
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்…

குழு (ஆண்கள்) : அவன் மன்மதகாட்டு…
சந்தனம் எடுத்து மார்பில்…
அப்பிக்கிட்டான்…
இவ குரங்கு கழுத்தில்…
குட்டிய போல…
தோளில் ஒட்டிக்கிட்டா…

குழு (பெண்கள்) : இனி புத்தி கலங்குற…
முத்தம் கொடுத்திடு… ராசாவே…

ஆண் & பெண் : பொண்ணுதான்…
ரத்தனக்கட்டி ஹா..
மாப்பிள்ள வெத்தலப்பொட்டி…
எடுத்து ரத்தினகட்டிய…
வெத்தல பொட்டியில்…
மூடச் சொல்லுங்கடி…

ஆண் & பெண் : முதலில் மாலை
மாத்துங்கடி…
பிறகு பாலை மாத்துங்கடி…
கட்டில் விட்டு…
காலையிலே கசங்கி வந்தா…
சேலை மாத்துங்கடி…

பெண் : மகராணி…
அதுதாண்டி தமிழ்நாட்டு பானி…

குழு (பெண்கள்) : கத்தாழங்காட்டுக்குள்…
மத்தாளம் கேக்குது…
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்…
குத்தாலச் சாரலே…
முத்தானப் பன்னீரு…
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்…

குழு (பெண்கள்) : கத்தாழங்காட்டுக்குள்…
மத்தாளம் கேக்குது…
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்…
குத்தாலச் சாரலே…
முத்தானப் பன்னீரு…
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்…

குழு (பெண்கள்) : கத்தாழங்காட்டுக்குள்…
மத்தாளம் கேக்குது…
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்…
குத்தாலச் சாரலே…
முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்…

ஆண் : புது பொண்ணே…
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…

ஆண் : புது பொண்ணே…
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…

—BGM—


Notes : Saarattu Vandiyila Song Lyrics in Tamil. This Song from Kaatru Veliyidai (2017). Song Lyrics penned by Vairamuthu. சரட்டு வண்டில பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading