உண்மை ஒருநாள் வெல்லும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிசரண்ஏ.ஆர்.ரகுமான்லிங்கா

Unmai Orunaal Vellum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உண்மை ஒருநாள் வெல்லும்…
இந்த உலகம் உன் பேர் சொல்லும்…
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே…
நீயடா நீயடா…

ஆண் : பொய்கள் புயல் போல் வீசும்…
ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்…
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்…

ஆண் : கலங்காதே…
கலங்காதே… கலங்காதே…
கரையாதே… கரையாதே…
கலங்காதே… கலங்காதே…

—BGM—

ஆண் : ராமனும் அழுதான்…
தர்மனும் அழுதான்…
நீயோ அழவில்லை…
உனக்கோ அழிவில்லை…

—BGM—

ஆண் : சிரித்து வரும் சிங்கம் உண்டு…
புன்னகைக்கும் புலிகள் உண்டு…
உரையாடி உயிர் குடிக்கும்…
ஓநாய்கள் உண்டு…

ஆண் : பொன்னாடை போர்த்திவிட்டு…
உன்னாடை அவிழ்ப்பதுண்டு…
பூச்செண்டில் ஒளிந்து நிற்கும்…
பூநாகம் உண்டு…

ஆண் : பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும்…
அதன் உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது…

ஆண் : உண்மை ஒருநாள் வெல்லும்…
இந்த உலகம் உன் பேர் சொல்லும்…
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே…
நீயடா நீயடா…

ஆண் : பொய்கள் புயல் போல் வீசும்…
ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்…
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்…

ஆண் : கலங்காதே…
கலங்காதே… கலங்காதே…
கரையாதே… கரையாதே…
கலங்காதே… கலங்காதே…

—BGM—

ஆண் : சுட்டாலும் சங்கு நிறம்…
எப்போதும் வெள்ளையடா…
மேன் மக்கள் எந்நாளும்…
மேன் மக்கள்தானே…

ஆண் : கெட்டாலும் நம் தலைவன்…
இப்போதும் ராஜன் அடா…
வீழ்ந்தாலும் வள்ளல் கரம்…
வீழாதுதானே…

ஆண் : பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும்…
அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது…

ஆண் : உண்மை ஒருநாள் வெல்லும்…
இந்த உலகம் உன் பேர் சொல்லும்…
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே…
நீயடா நீயடா…

ஆண் : பொய்கள் புயல் போல் வீசும்…
ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்…
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்…

ஆண் : கலங்காதே…
கலங்காதே… கலங்காதே…
கலங்காதே… கலங்காதே…
கலங்காதே… கலங்காதே…


Notes : Unmai Orunaal Vellum Song Lyrics in Tamil. This Song from Lingaa (2014). Song Lyrics penned by Vairamuthu. உண்மை ஒருநாள் வெல்லும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading