என் மன்னவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & அதிதி பால்ஏ.ஆர்.ரகுமான்லிங்கா

En Mannavva Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ… என் மன்னவா என் மன்னவா…
என்னவிட அழகி உண்டு…
ஆனால் உன்னைவிட உன்னைவிட…
தலைவன் இல்லை… ஆமாம்…
தலைவன் இல்லை… ஓய்…

பெண் : சின்னச் சின்ன நட்சத்திரம்…
பறிக்க வந்தாய்…
இந்த வெண்ணிலவை…
வெண்ணெய் பூசி விழுங்கிவிட்டாய்…

பெண் : சின்னச் சின்ன நட்சத்திரம்…
பறிக்க வந்தாய்…
இந்த வெண்ணிலவை…
வெண்ணெய் பூசி விழுங்கிவிட்டாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அதிவீரா உயிரை…
உயிரால் தொடுவீரா… ஹோய்…
உன் கண்களும்…
உன் கண்களும் பூ தேடுதே…
உன் கைகளோ…
உன் கைகளோ வேர் தேடுதே…

ஆண் : சின்னச் சின்ன நட்சத்திரம்…
பறிக்க வந்தேன்…
இந்த வெண்ணிலவை வெண்ணெய்…
பூசி விழுங்கிவிட்டேன்

பெண் : அதிவீரா உயிரை…
உயிரால் தொடுவீரா… ஹோய்…
அதிவீரா உயிரை…
உயிரால் தொடுவீரா…

BGM

பெண் : நூறு யானைகளின் தந்தம்கொண்டு…
ஒரு கவசம் மார்பில் அணிந்தாய்…
கலசம் கொண்டு அந்தக் கவசம் உடைத்து…
உன் மார்பில் நான் புகுந்தேனே…

ஆண் : தென்னாட்டுப் பூவே…
தேனாழித் தீவே…
பால் அன்னம் நீதான்…
பசிக்காரன் நான்தான்…

ஆண் : மோகக் குடமே…
முத்து வடமே…
உந்தன் கச்சை மாங்கனி…
பந்தி வை ராணி…

பெண் : ஹோய்… சின்னச் சின்ன நட்சத்திரம்…
பறிக்க வந்தாய்…
இந்த வெண்ணிலவை…
வெண்ணெய் பூசி விழுங்கிவிட்டாய்…

பெண் : அதிவீரா உயிரை…
உயிரால் தொடுவீரா…

BGM

ஆண் : வெயில் பாராத வெள்ளை பூக்களை…
கையில் தருவாய் கண்ணே…
ஏழு தேசங்களை வென்ற மன்னன்…
உன் கால் சுண்டுவிரல் கேட்டேனே…

பெண் : சிற்றின்பம் தாண்டி…
பேரின்பம் கொள்வோம்…
உயிர் தீண்டியே நாம்…
உடல் தாண்டிப் போவோம்…

பெண் : ஞான அழகே மோன வடிவே…
என்னைக் கூடல்கொள்ள வா…
கொற்றவை மைந்தா…

ஆண் : சின்னச் சின்ன நட்சத்திரம்…
பறிக்க வந்தேன்…
இந்த வெண்ணிலவை…
வெண்ணெய் பூசி விழுங்கிவிட்டேன்…

பெண் : ஹோய்… சின்னச் சின்ன நட்சத்திரம்…
பறிக்க வந்தாய்…
இந்த வெண்ணிலவை…
வெண்ணெய் பூசி விழுங்கிவிட்டாய்…

பெண் : அதிவீரா உயிரை…
உயிரால் தொடுவீரா…
அதிவீரா உயிரை…
உயிரால் தொடுவீரா…


Notes : En Mannavva Song Lyrics in Tamil. This Song from Lingaa (2014). Song Lyrics penned by Vairamuthu. என் மன்னவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading