Category Archives: போஸ்

போஸ் – Bose (2004)

என்ன என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்தேவன் ஏகாம்பரம் & மாதங்கியுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Enna Enna Song Lyrics in Tamil


BGM

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
ஆண் : அமினீசியா…

பெண் : இப்ப இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர்…
இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்…
ஆண் : நோ ஐடியா…

பெண் : என்னோட பேசிவிட்டு…
என்னத்தான் பாத்துவிட்டு…
இப்பத்தான் தெரியாதுனு…
சொல்றான் சொல்றான்…

பெண் : செல்சுக்குள் ட்ரீட்மெண்ட் பண்ணி…
ஜீன்சுக்குள் ஆப்ரேட் பண்ணி…
ஏதாச்சும் செய்யுங்களேன் ப்ளீஸ் டாக்டர்…

BGM

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
ஆண் : அமினீசியா…

BGM

பெண் : உன்னோட சிபியூ அதுக்குள்ள தேடிப்பார்…
என்னோட நினைவும் அங்கிருக்கும்…
உன்னோட ஹார்ட்வேர் கேங்காகிப் போனதால்…
காதல் ஃபயில் அழிஞ்சே போயிருக்கும்…

ஆண் : ஒன்னோட டார்ச்சர் தாங்கலையே…
என்னோட நேட்சர் இப்படியே…
ரோபோக்கள் மனசில் லவ் இல்லையே…
லவ் பண்ணும் ரோபோ செய்யலையே…

பெண் : அட விஷந்தன் வைரஸ்…
உன்னை தாக்க எல்லாம் மறந்திருச்சா…

BGM

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
ஆண் : அமினீசியா…

BGM

ஆண் : பிளாக் அண்ட் ஒயிட் ரோஜாப்பூ…
நீ அன்று கேட்டாயே…
ஞாபகம் வருதே இப்பொழுது…
கிராபிக்ஸில் வானவில் நான் செய்து தந்தேனே…
நினைவுகள் வருதே இப்பொழுது…

பெண் : பைன் ஆப்பிள் டேப்லெட் கொண்டு வந்து…
ஆளுக்கு பாதி சாப்பிட்டோமே…
சேட் லைட் பஸ்சில் தொங்கிக்கொண்டே…
நீ நானும் டூயட் பாடினோமே…
அந்த ஆகஸ்ட் பதினஞ்சு…
நீயும் நானும் மீட் பண்ணி பேசினோமே…

BGM

பெண் : என்ன என்ன என்ன ஆச்சு டாக்டர்…
இவனுக்கு என்ன ஆச்சு டாக்டர்…
ஆண் : அமினீசியா…

பெண் : இப்ப இப்ப என்ன பண்ணலாம் டாக்டர்…
இதுக்கென்ன ட்ரீட்மெண்ட் பண்ணலாம் டாக்டர்…
ஆண் : நோ ஐடியா…

பெண் : என்னோட பேசிவிட்டு…
என்னத்தான் பாத்துவிட்டு…
இப்பத்தான் தெரியாதுனு…
சொல்றான் சொல்றான்…

பெண் : செல்சுக்குள் ட்ரீட்மெண்ட் பண்ணி…
ஜீன்சுக்குள் ஆப்ரேட் பண்ணி…
ஏதாச்சும் செய்யுங்களேன் ப்ளீஸ் டாக்டர்…

BGM


Notes : Enna Enna Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Pa. Vijay. என்ன என்ன பாடல் வரிகள்.


டோலி டோலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷாலினியுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Doli Doli Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி…
கொண்டாடிப் பார்ப்போம் வா…
லாலி லாலி நான் பாடும் லாலி…
கொண்டாடி தீர்ப்போம் வா…

பெண் : சுவரிருந்தால் நாம் உடைத்திடலாம்…
தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம்…
மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும்… ஹேய் ஏய் ஏய்…

குழு : விரலாலே விதி மாற்றுவோம்…
விண்மீனின் நிறம் மாற்றுவோம்…
இளமைதான் அடையாளமே…
இல்லை ஓர் கடிவாளமே…

பெண் : ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி…
கொண்டாடிப் பார்ப்போம் வா…
லாலி லாலி நான் பாடும் லாலி…
கொண்டாடி தீர்ப்போம் வா…

BGM

பெண் : புதிய கிழக்கு புதிய விளக்கு…
உலகம் பூந்தோட்டமே… ஹேய்…
புதிய முகங்கள் புதிய மணங்கள்…
எல்லாமே பிடிச்சிருக்கு…

பெண் : புதிய கைகள் புதிய பொய்கள்…
இதுவும் சூதாட்டமே… ஹேய்…
புதிய இடங்கள் புதிய தடங்கள்…
எல்லாமே பிடிச்சிருக்கு…
புதிய கூட்டம் புதிய ஆட்டம்…
அதுவும் பிடிச்சிருக்கு…

குழு : விரலாலே விதி மாற்றுவோம்…
விண்மீனின் நிறம் மாற்றுவோம்…
இளமைதான் அடையாளமே…
இல்லை ஓர் கடிவாளமே…

BGM

பெண் : மழையின் துளியை மலரின் இதழை…
ரசிக்கும் வயசல்லவா… ஹேய்…
புல்லின் தலையில் கொட்டும் பனியை…
பார்க்காமல் போவோமா…

பெண் : தீயை தீண்ட தீவை தாண்ட…
துணியும் மனசல்லவா… ஹேய்…
நடன அலையின் நகரும் முகிலின்…
நங்கூரம் ஆவோமா…
ஒத்த இதயம் ஒத்து பிரியும்…
ஒன்றாக சேர்வோமா… ஆ…

பெண் : ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி…
கொண்டாடிப் பார்ப்போம் வா…
லாலி லாலி நான் பாடும் லாலி…
கொண்டாடி தீர்ப்போம் வா…

பெண் : சுவரிருந்தால் நாம் உடைத்திடலாம்…
தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம்…
மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும்… ஹேய் ஹேய் ஹேய்…

குழு : விரலாலே விதி மாற்றுவோம்…
விண்மீனின் நிறம் மாற்றுவோம்…
இளமைதான் அடையாளமே…
இல்லை ஓர் கடிவாளமே… ஏ…

BGM


Notes : Doli Doli Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Thamarai. டோலி டோலி பாடல் வரிகள்.


பொம்மலாட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கார்த்திக் & சித்ரா சிவராமன்யுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Bommalattam Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான்…
நல்ல பொம்மை கெடச்சிருக்கு…

பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்…
நல்ல காளை கெடச்சிருக்கே…

ஆண் : சாவி கொடுத்தா பொம்மையும்…
நான் சொன்னத செஞ்சிடுமா…

பெண் : தண்ணி காட்டுனா காளையும்…
என் சேலைக்குள் அடங்குமா…

ஆண் : பசிய நீ தூண்டுற…
வயச ஏன் சீண்டுற…

பெண் : மனச கிள்ளாதடா…
அழகா கொல்லாதடா…
அட அடங்காத ஆசை வந்து…
அடி வயிற கலக்குதடா…

ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான்…
நல்ல பொம்மை கெடச்சிருக்கு கெடச்சிருக்கு…

பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்…
நல்ல காளை கெடச்சிருக்கே கெடச்சிருக்கே…

BGM

ஆண் : ஒன் மச்சத்துல வச்சிருக்க ஆசை ஆசை…
முத்தத்தால பச்ச குத்தவா…

பெண் : நான் வெக்கம் விட்டு எல்லாத்தையும் பேச பேச…
சாமத்துல எழுப்பிவிடவா…

ஆண் : மூச்சுக் காத்துக்கே நீ மூழ்காமப் போவடி…
வாயமூடி கிட்டு சும்மா போறியா…

பெண் : ஏய் ஏய்… வீணா பேசுவது வேலைக்கு ஆகாதுடா…
என்ன கொஞ்சம் முடிஞ்சா நீ அடக்கிக்கிடா…

ஆண் : ஏய்… பொம்மலாட்டம் ஆடத்தான்…
நல்ல பொம்மை கெடச்சிருக்கு கெடச்சிருக்கே…

பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்…
நல்ல காளை கெடச்சிருக்கே… ஏஏ…

BGM

ஆண் : ஹேய்… மூணு டன்னு மோக தீய…
முந்தானையில் மறச்சு…
ஏன்டி என்ன சூடு ஏத்துற…

பெண் : ஹேய்… முக்காப்படி காமத் தீய…
வேர்வையில கொளச்சு…
என் ஒடம்பில் ஏன்டா பூசுற…

ஆண் : நாடி நரம்பு எல்லாம்…
நாயணந்தான் ஊதுது…
வரம்பு மீறி நீயும் கிட்ட வாடி வா…

பெண் : ஏய்… கட்ட எறும்புக்குத்தான்…
கரும்பு தோட்டம் கசக்குமடா…
நானே ஒன்ன ஓடி வந்து கடிச்சுக்கிறேன்…

ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான்…
நல்ல பொம்மை கெடச்சிருக்கு…

பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்…
நல்ல காளை கெடச்சிருக்கே…

ஆண் : சாவி கொடுத்தா பொம்மையும்…
நான் சொன்னத செஞ்சிடுமா…

பெண் : ஹ… தண்ணி காட்டுனா காளையும்…
என் சேலைக்குள் அடங்குமா…

ஆண் : பொம்மலாட்டம் ஆடத்தான்…
நல்ல பொம்மையும் கெடச்சிருக்கு கெடச்சிருக்கு…

பெண் : ஜல்லிக்கட்டு ஆடத்தான்…
நல்ல காளையும் கெடச்சிருக்கே கெடச்சிருக்கே…


Notes : Bommalattam Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Snehan. பொம்மலாட்டம் பாடல் வரிகள்.


நிஜமா நிஜமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே.கே & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Nijama Nijama Song Lyrics in Tamil


ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…

BGM

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…

பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…

ஆண் : ஒரு மரங்கொத்தி பறவை…
மனம் கொத்தி போகுதே…
மழை நின்ற போதும்…
மரக்கிளை தூறுதே…

ஆண் : பூட்டி வைத்த நெஞ்சில் பூப்பூக்குதே…
பார்க்கும் போதே கண்கள் பறிப்போகுதே…

பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…

BGM

ஆண் : நேற்று இன்று நாளை என்பதென்ன…
காலம் உறைந்து போனது…
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச…
கடவுள் ஆக தோணுதே…

பெண் : வேற்று கிரகம் போலே இன்று எனக்கு…
எந்தன் வீடு ஆனதே…
வெற்று கோபம் என்ன அர்த்தம் மாறி…
வெட்கம் ஆகி போனதே…

ஆண் : வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே…
வானமும் இடிந்தால் அதுதான் காதலே…

பெண் : இடி மின்னல் மழை இந்த மூன்றுமே
இதயத்தில் தந்தால் அது காதலே

ஆண் & பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ நாம் நிஜமா…

BGM

ஆண் : கோடை வாடை இளவேனில் காலம்…
கார்காலம் நான்குமே…
காதல் காலம் எந்த காலம் என்று…
உண்மை சொல்ல கூடுமோ…

பெண் : கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு…
திசைகள் நான்கு யாவுமே…
காதல் எந்த திசையில் செல்லும் என்று…
கண் சொல்ல கூடுமோ…

ஆண் : கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே…
கடைசி வரைக்கும் சுமப்பேன் உனையே…

பெண் : உயிர் அறை ஒன்றை உருவாக்கிய…
என் உயிர் உள்ள வரை என்னை பூட்டுவேன்…

ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா…
நீ வந்த நொடி நிஜமா…


Notes : Nijama Nijama Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Na. MuthuKumar. நிஜமா நிஜமா பாடல் வரிகள்.


வைத்த கண்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மது பாலகிருஷ்ணன் & ஸ்ரீவர்த்தினியுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Vaitha Kann Song Lyrics in Tamil


BGM

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

BGM

பெண் : ஹா… யாரோ எந்தன் மனசின் நடுவிலே…
ரோஜா தோட்டம் வைத்தது…
உற்று பார்த்தேன் அந்த பகுதியில்…
உந்தன் கால் தடம்…

ஆண் : ஆஆ… யாரோ எந்தன் உயிரின் அறையிலே…
கவிதை புத்தகம் படித்தது…
தேடி பார்த்தேன் அந்த இடத்திலே…
உந்தன் வாசனை…

பெண் : உன் பேரழகு கொஞ்சம்…
உன் பேச்சழகு கொஞ்சம்…
என் பருவத்துக்குள் வந்து…
எனை பஸ்பம் செய்யுதடா…

ஆண் : உன் கண்ணழகு கொஞ்சம்…
உன் முன்னழகு கொஞ்சம்…
என் இரவுக்குள்ளே வந்து…
துளியாய் இறங்கி கடலாக மாறியதே…

பெண் : தந்திரா கண்களில் என்னென்ன…
தந்திரம் செய்தாயோ…
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்…
பத்திரம் ஆனாயோ…

BGM

பெண் : இந்த சிரிப்பு இந்த சிரிப்புதான்…
என்னை கொள்ளை கொண்டது…
இந்த கண்கள் இந்த கண்கள்தான்…
கலகம் செய்தது…

ஆண் : இந்த சிணுங்கள் இந்த சிணுங்கள்தான்…
எந்தன் அணுவில் நுழைந்தது…
இந்த செழுமை இந்த செழுமைதான்…
வயசை ஏத்துது…

பெண் : நீ முத்தம் மொத்தம் வைத்தே…
என் கண்ணம் பள்ளம் ஆச்சு…
உன் அத்துமீறல் பார்த்து…
என் பெண்மை திண்மை ஆச்சு…

ஆண் : நீ என்னை தீண்டி தீண்டி…
என் சுவாச பையில் ஏனோ…
ஒரு வெப்ப பந்து நின்று…
மெதுவாய் மெதுவாய் சூடாக சுழலுதடி…

பெண் : தந்திரா கண்களில் என்னென்ன…
தந்திரம் செய்தாயோ…
சுந்தரா பெண்ணிவள் நெஞ்சுக்குள்…
பத்திரம் ஆனாயோ…

பெண் : ஆ… வெண்ணிலா வேர்க்குது பாரம்மா…
வேர் வரை பூக்குது ஏனம்மா…

குழு : சிப்பியில் சமுத்திரம் சிக்கியது என்னம்மா…

குழு : வைத்த கண் வைத்தது தானோடி…
அப்படியே நிற்கின்றாய்…
தைத்த முள் தைத்தது தானோடி…
சொக்கியே போகின்றாய்…

குழு : அர்ஜுனன் உன்னை பெண் பார்க்க…
அவசரம் நீயும் பூப்பூக்க…
யுத்தங்கள் செய்திட யுவதியும் வந்தாளே…

BGM


Notes : Vaitha Kann Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Pa. Vijay. வைத்த கண் பாடல் வரிகள்.