டோலி டோலி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஷாலினியுவன் ஷங்கர் ராஜாபோஸ்

Doli Doli Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி…
கொண்டாடிப் பார்ப்போம் வா…
லாலி லாலி நான் பாடும் லாலி…
கொண்டாடி தீர்ப்போம் வா…

பெண் : சுவரிருந்தால் நாம் உடைத்திடலாம்…
தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம்…
மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும்… ஹேய் ஏய் ஏய்…

குழு : விரலாலே விதி மாற்றுவோம்…
விண்மீனின் நிறம் மாற்றுவோம்…
இளமைதான் அடையாளமே…
இல்லை ஓர் கடிவாளமே…

பெண் : ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி…
கொண்டாடிப் பார்ப்போம் வா…
லாலி லாலி நான் பாடும் லாலி…
கொண்டாடி தீர்ப்போம் வா…

—BGM—

பெண் : புதிய கிழக்கு புதிய விளக்கு…
உலகம் பூந்தோட்டமே… ஹேய்…
புதிய முகங்கள் புதிய மணங்கள்…
எல்லாமே பிடிச்சிருக்கு…

பெண் : புதிய கைகள் புதிய பொய்கள்…
இதுவும் சூதாட்டமே… ஹேய்…
புதிய இடங்கள் புதிய தடங்கள்…
எல்லாமே பிடிச்சிருக்கு…
புதிய கூட்டம் புதிய ஆட்டம்…
அதுவும் பிடிச்சிருக்கு…

குழு : விரலாலே விதி மாற்றுவோம்…
விண்மீனின் நிறம் மாற்றுவோம்…
இளமைதான் அடையாளமே…
இல்லை ஓர் கடிவாளமே…

—BGM—

பெண் : மழையின் துளியை மலரின் இதழை…
ரசிக்கும் வயசல்லவா… ஹேய்…
புல்லின் தலையில் கொட்டும் பனியை…
பார்க்காமல் போவோமா…

பெண் : தீயை தீண்ட தீவை தாண்ட…
துணியும் மனசல்லவா… ஹேய்…
நடன அலையின் நகரும் முகிலின்…
நங்கூரம் ஆவோமா…
ஒத்த இதயம் ஒத்து பிரியும்…
ஒன்றாக சேர்வோமா… ஆ…

பெண் : ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி…
கொண்டாடிப் பார்ப்போம் வா…
லாலி லாலி நான் பாடும் லாலி…
கொண்டாடி தீர்ப்போம் வா…

பெண் : சுவரிருந்தால் நாம் உடைத்திடலாம்…
தடை இருந்தால் நாம் தகர்த்திடலாம்…
மனம் திறந்து நாம் மகிழ்ந்திட வேண்டும்… ஹேய் ஹேய் ஹேய்…

குழு : விரலாலே விதி மாற்றுவோம்…
விண்மீனின் நிறம் மாற்றுவோம்…
இளமைதான் அடையாளமே…
இல்லை ஓர் கடிவாளமே… ஏ…

—BGM—


Notes : Doli Doli Song Lyrics in Tamil. This Song from Bose (2004). Song Lyrics penned by Thamarai. டோலி டோலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading