வனக்கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிதேவாகல்லூரி வாசல்

Vanakkiliye Song Lyrics in Tamil


பெண் : வனக்கிளியே…
வனக்கிளியே நந்தவனக் கிளியே…

குழு : மார்கழி மாதம் முன் பனிக் காலம்…
வீசிடும் பூங்காற்றே…
மூங்கிலில் மீது மோதிடும் போது…
கேட்டிடும் தேன் பாட்டே…

பெண் : காலையில் அதிகாலையில்…
மாலையில் மலர்ச்சோலையில்…
என்னத்தான் மெல்லத்தான்…
என்னைத்தான் அணைத்தான்…

பெண் : வனக் கிளியே நந்தவனக் கிளியே…
வனக் கிளியே நந்தவனக் கிளியே…

BGM

பெண் : சின்னக் கண்ணன் உன்னைப் பார்த்து…
தோகை மயில் ஆடுது…
கன்னி எந்தன் நெஞ்சம் நாளும்…
உன்னை எண்ணி வாடுது…
குழு : ஜம்ஜம் ஜஜம் ஜம்…

பெண் : ஓ… புல்வெளியில் மெத்தையிட்டு…
மூடு பனி தூங்குது…
ராசா மகன் தோளில் வண்ண…
ரோசா ஒண்ணும் சாயுது…

பெண் : ஏரியில்…
குழு : ஓஓஓ…

பெண் : ஏரியின் கரை ஓரமே…
நாரைகள் கொஞ்சும் நேரமே…
என்னத்தான் மெல்லத்தான்…
என்னைத்தான் அணைத்தான்…

குழு : வாடையில் ஆடும் ஜாடையில் பாடும்…
வாசனை பூச்செண்டு…
பெண் : ஓஓஓ…
குழு : ஆரம்பமாகும் ஆனந்த ராகம் வாழிய பல்லாண்டு…

பெண் : வனக்கிளியே… ஏ…
குழு : என்றும் இளம் காதல் மனம் வாழும்…
பெண் : வனக்கிளியே… ஏ…
குழு : சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும்…

BGM

பெண் : தேசம் விட்டு தேசம் வந்த…
தண்ணீர் மழை மேகமே…
தேக்கு மரக் காட்டில்தான்…
தூறல் விழும் நேரமே…
குழு : ஜம்ஜம் ஜஜம் ஜம்…

பெண் : ஓ… வெள்ளி மழைச்சாரல் பட்டு…
வாடும் இந்த தேகமே…
வஞ்சி மகள் தேகமெல்லாம்…
உன்னுடைய மோகமே…

பெண் : நீரலை…
குழு : ஓஓஓ…

பெண் : நீரலை வந்து பாய்ந்திட…
நாணலும் தலை சாய்ந்திட…
என்னத்தான் மெல்லத்தான்…
என்னைத்தான் அணைத்தான்…

குழு : அன்பே உந்தன் பேரழகெல்லாம்…
அஜந்தாவின் ஓவியம்…
இங்கே சிந்தும் வாய்மொழி எல்லாம்…
இளங்கோவின் காவியம்…

பெண் : வனக்கிளியே… ஏ…
குழு : என்றும் இளம் காதல் மனம் வாழும்…
பெண் : வனக்கிளியே… ஏ…
குழு : சங்கத் தமிழ் உந்தன் புகழ் பாடும்…


Notes : Vanakkiliye Song Lyrics in Tamil. This Song from Kalloori Vaasal (1996). Song Lyrics penned by Vaali. வனக்கிளியே பாடல் வரிகள்.