முத்துத் தேரே தேரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபார்வதி என்னை பாரடி

Muthu Therey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முத்துத் தேரே தேரே…
பக்கம் யாரே யாரே…
பொங்கும் ஆறே ஆறே…
இங்கே வேறே யாரே…

பெண் : ஆரோ ஆரிரோ எங்கோ ராகம் கேட்குது…
கேட்கும் ராகத்தில் இந்த ஊரே தூங்குது…

பெண் : முத்துத் தேரே தேரே…
பக்கம் யாரே யாரே…
ஆண் : பொங்கும் ஆறே ஆறே…

—BGM—

ஆண் : உள்ளங்காலும் உள்ளங்கையும்…
சில்லென்றாகும் வண்ணம்…

பெண் : உன்னைப் பாதி என்னைப் பாதி…
ஊதக் காற்று தின்னும்…

ஆண் : வெப்பம் ஏற வேண்டும் வேகம்…
தெப்பம் போல ஆட…

பெண் : வெட்கம் வந்து மேலும் கீழும்…
வெள்ளம் போல ஓட…

ஆண் : ஹ… அம்மாடி நாணமோ…
எப்போது நீக்குமோ…
அம்மாடி நாணமோ…
எப்போது நீக்குமோ…

பெண் : மாலையும் மேளமும் கூடினால் நீங்கலாம்…

பெண் : முத்துத் தேரே தேரே…
ஆண் : பக்கம் யாரே யாரே…
பெண் : பொங்கும் ஆறே ஆறே…

—BGM—

ஆண் : எட்டிப் பார்க்க யாரும் இல்லை…
கட்டிப் பார்க்க வேண்டும்…

பெண் : ம்… கட்டிப் பார்த்தால் தப்புச் செய்ய…
கையும் காலும் தூண்டும்…

ஆண் : அங்கம் யாவும் மின்னுதம்மா…
தங்கப் பாளம் போலே…

பெண் : அந்தம் ஆதி அளப்பதென்ன…
உந்தன் பார்வையாலே…

ஆண் : ஹ… எல்லாம் உன் ஏக்கமே…
இங்கேது தூக்கமே…
தன்னானா னான்னனா…
இங்கேது தூக்கமே…

பெண் : ஏக்கமே தீர்க்கவே…
நாளை நான் பார்க்கிறேன்…

பெண் : முத்துத் தேரே…
ஆண் : தேரே பக்கம் யாரே…
பெண் : யாரே பொங்கும் ஆறே…
ஆண் : ஆறே இங்கே வேறே…
பெண் : யாரே…

ஆண் : ஆரோ ஆரிரோ எங்கோ ராகம் கேட்குது…
பெண் : கேட்கும் ராகத்தில் இந்த ஊரே தூங்குது…

—BGM—


Notes : Muthu Therey Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Gangai Amaran. முத்துத் தேரே தேரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading