சின்னப் பூங்கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபார்வதி என்னை பாரடி

Chinna Poongili Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி…
இனிக்கும் நன்நாள் இது…
வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி…
இணையும் பொன் நாள் இது…

ஆண் : சோலையோ நடுச் சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ…
ஏங்கினேன் இதயம் இனியும் சரணம்…

பெண் : சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி…
இனிக்கும் நன்நாள் இது…
வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி…
இணையும் பொன் நாள் இது…

BGM

ஆண் : ஆசை தீர பேச வேண்டும் பூங்காவிலே…
ஆயுள் காலம் யாவும் உன்னை நீங்காமலே…

பெண் : உன்னைச் சேர ஏங்கும் மாது…
எல்லைக் கோட்டை தாண்டாதா…
தென்றல் காற்றை தீண்டச் சொல்லி…
தென்னங்கீற்று வேண்டாதா…

ஆண் : வேண்டினால் விரல் தீண்டுமே…
தீண்டினால் சுகம் தோன்றுமே…

பெண் : தூங்குமோ இரு நேத்திரம்…
தாங்குமோ இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி…
இனிக்கும் நன்நாள் இது…

பெண் : வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி…
இணையும் பொன் நாள் இது…

BGM

பெண் : காலை மாலை கேட்பது உந்தன் ஆலாபனம்…
காலம் தோறும் காண்பது உந்தன் ஆராதனம்…

ஆண் : உன்னைத் தீண்டும் கைகள்…
வேறு பெண்ணைத் தீண்டி வாழாது…
சங்கப் பாடல் என்றும் இங்கே…
சந்தம் நீங்கிப் போகாது…

பெண் : காதலே ஒரு காவியம்…
நீண்ட நாள் நிற்கும் ஓவியம்…

ஆண் : கண்மணி என்னைக் கூட வா…
நாள் எல்லாம் இதயம் இனியும் சரணம்…

பெண் : சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி…
இனிக்கும் நன்நாள் இது…
வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி…
இணையும் பொன் நாள் இது…

பெண் : சோலையோ நடுச் சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ…
ஏங்கினேன் இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி…
இனிக்கும் நன்நாள் இது…

பெண் : வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி…
இணையும் பொன் நாள் இது…


Notes : Chinna Poongili Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Vaali. சின்னப் பூங்கிளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading