பார்வதி என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபார்வதி என்னை பாரடி

Parvathi Ennai Paradi Song Lyrics in Tamil


ஆண் : பார்வதி என்னைப் பாரடி…
பூங்கொடி வந்து சேரடி…
சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

ஆண் : சோலையோ நடுச்சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ…
வாடினேன் இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வேடன் வந்து சூழ்ந்த போதும்…
உன் எல்லைதான்…
வேடந்தாங்கல் என்று எண்ணும்…
பூங்கிள்ளை நான்…

ஆண் : முள்ளில் வேலி போட்டால் என்ன…
மாலைக் காற்று தாண்டாதா…
கள்ளில் ஊறும் ஜாதிப் பூவை…
கைகள் நீட்டித் தீண்டாதா…

ஆண் : நீ அல்லால் உயிர் வேறெது…
நீர் இன்றி பயிர் வாடுது…
தேவியே எந்தன் ஆவியே கேளடி…
இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

BGM

ஆண் : உன்னைச் சேர்ந்து வாழத்தானே…
நான் வாழ்வது…
உன்னை நீங்கி தேகம் இங்கே…
ஏன் வாழ்வது…

ஆண் : மண்ணில் வாழும் ஏழைக்கெல்லாம்…
பெண்ணின் மோகம் ஆகாதா…
மண்ணால் செய்த பாண்டம் என்றால்…
பொங்கும் சோறு வேகாதா…

ஆண் : தேவதாஸ் கதை பாரடி…
ஓய்ந்ததா பதில் கூறடி…
காதலி எந்தன் பார்வதி காதலன்…
இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…

ஆண் : சோலையோ நடுச்சாலையோ…
தேடினேன் உனையே…
காலையோ அந்தி மாலையோ வாடினேன்…
இதயம் இனியும் சரணம்…

ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ…
மயக்கம் நெஞ்சோடுதான்…
வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ…
கலக்கம் கண்ணோடுதான்…


Notes : Parvathi Ennai Paradi Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Vaali. பார்வதி என்னை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading