unna-nenachadhum-song-lyrics-in-tamil

உன்ன நெனச்சதும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஸ்ரேயா கோஷல் & சர்தக் கல்யாணிஏ.ஆர்.ரகுமான்வெந்து தணிந்தது காடு

Unna Nenachadhum Song Lyrics in Tamil


ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே…
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே…
முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே…
முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே…

பெண் : இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே…
ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே…

ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே…
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே…

பெண் : தூரம் குறைந்ததும் பேச தோணுதே…
பேச பேசதான் இன்னும் பிடிக்குதே…
பிடிக்கும் என்றதால் நடிக்க தோணுதே…
நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே…

ஆண் : சிரிப்பு வந்ததும் நெருக்கம் ஆகுதே…
நெருங்கி பார்க்கையில் நேசம் புரியுதே…

பெண் : நேசங்களால் கைகள் இணைந்ததே…
கை சேர்ந்ததால் கவலை மறந்ததே…
தோள் சாயவும் தொலைந்து போகவும்…
கடைசியாக ஓரிடம் கிடைத்ததே…

ஆண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே…
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே…

BGM

ஆண் : மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா…
தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா…

பெண் : இரு புறம் அதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா…
மழையென வரும் மரகத குரல் சுவரில் முட்டுமா…

ஆண் : எனது புதையல் மணலிலே கொதிக்கும் அனலிலே…
இருந்தும் விரைவில் கை சேரும் பயணம் முடிவிலே…

ஆண் & பெண் : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே…
மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே…


Notes : Unna Nenachadhum Song Lyrics in Tamil. This Song from Vendhu Thanindhathu Kaadu (2022). Song Lyrics penned by Thamarai. உன்ன நெனச்சதும் பாடல் வரிகள்.