மல்லிப்பூ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமதுஸ்ரீஏ.ஆர்.ரகுமான்வெந்து தணிந்தது காடு

Mallipoo Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…

பெண் : மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற…

பெண் : நான் ஒத்தயில தத்தளிச்சேன்…
தினம் சொப்பனத்தில் மட்டும்தான்…
உன்ன நான் சந்தித்தேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹேய் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
பத்தமடை பாயில் வந்து சொக்கி விழ போற…

BGM

பெண் : வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம்…
வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்…
சோலி தேடி போன காணாத தூரம்…
கோட்டிக்கரை நெஞ்சில் தாளாத பாரம்…

பெண் : காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்…
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்…

BGM

பெண் : ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…

பெண் : மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…

குழு (ஆண்கள்) : பத்து தல பாம்பா பாம்பா பாம்பா…
முத்தம் தர போற போற போற…
பத்து தல பாம்பா…
ஒய்… முத்தம் தர போற மச்சான்…

குழு (ஆண்கள்) : ஹே… மச்சான் மச்சான் மச்சான்…
மச்சான் மச்சான் மச்சான்…
மச்சான் எப்போ போக போற…

குழு (ஆண்கள்) : மச்சான் எப்போ போக போற…
மச்சான் எப்போ எப்போ…
மச்சான் எப்போ போக போற…

பெண் : தூரமா போனது துக்கமா மாறும்…
பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்…
ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்…
கோழி கூவும் போதும் தூங்காம வேகும்…

பெண் : அங்கு நீயும் இங்கு நானும்…
என்ன வாழ்க்கையோ…
போதும் போதும் சொல்லாமல் வந்து சேரும்…

பெண் : ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…
மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
உத்தரத்த பாத்தே நானும் விக்கி விடப்போறேன்…

பெண் : அட எத்தன நாள் ஏக்கமிது…
பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே…
துணி காயுதே…

பெண் : கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்…
சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்…
மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
சொல்லிக்காம வந்து என்ன சொக்க விடப்போற…


Notes : Mallipoo Song Lyrics in Tamil. This Song from Vendhu Thanindhathu Kaadu (2022). Song Lyrics penned by Thamarai. மல்லிப்பூ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading