காலத்துக்கும் நீ வேணும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசிலம்பரசன் & ரக்ஷிதா சுரேஷ்ஏ.ஆர்.ரகுமான்வெந்து தணிந்தது காடு

Kaalathukkum Nee Venum Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல…
இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல…
என்னோடு வா இப்பயே வா…

பெண் : நீ வந்த நெழல் தந்த எதனாலோ ஒத்து கொண்டேன்…
நீ பாக்கும் போதும் பேசும் போதும் நெஞ்சில மின்னல் கண்டேன்…
இனிமேல் என் வாழ்வே உன்னோடு…
ஓ ஹோ… வருவேனே பின்னோடு…

ஆண் : ஓ… இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும்…
கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும்…
உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேணும்…
உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேணும்…

ஆண் : கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும்…
காலத்துக்கும் நீ வேணும்…

பெண் : என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல…
இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல…
உன்னோடு நான் இப்பயேதான்…

—BGM—

ஆண் : உன் கூர சேல கூத்தாடும்…
குங்குமத்தில் முங்கும்…

பெண் : ஓ… தங்க தோடு பேசும் காதோரம்…

ஆண் : ஓ… வாழை மஞ்சள் தென்னைகள்…
வாசல் பந்தல் ஆகும்…

பெண் : ஓ… மேள சத்தம் மெட்டி சத்தம்…
என் நெஞ்சு கொண்டாடும்…

ஆண் : ஓ… இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும்…
கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும்…

பெண் : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேணும்…
உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேணும்…
கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும்…
காலத்துக்கும் நீ வேணுமே…

—BGM—

பெண் : ஓட்டு கேட்கும் காத்தே கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ…
ஒரு வெட்கம் தின்னு நிக்கும் என்ன தொட்டு போவாயோ…

ஆண் : என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன்…
இன்னாள் கனாக்களை நிகழ்த்தி பார்க்கும் முதல்நாள்…

பெண் : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேணும்…
நான் முன்னே பின்னே சூடாத முல்லை பூவும் நீ…
தென்றல் ஆகும் தீயே…
எனை மெல்ல கொல்லும் நோயே…
என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே…

பெண் : ஓ… இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும்…
கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும்…

ஆண் & பெண் : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேணும்…
உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேணும்…
கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும்…
காலத்துக்கும் நீ வேணும்…

—BGM—

Notes : Kaalathukkum Nee Venum Song Lyrics in Tamil. This Song from Vendhu Thanindhathu Kaadu (2022). Song Lyrics penned by Thamarai. காலத்துக்கும் நீ வேணும் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading