உருகுதே மருகுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரேயா கோஷல், ஷங்கர் மகாதேவன்ஜி. வி. பிரகாஷ் குமார்வெயில்

Uruguthey Maruguthey Song Lyrics in Tamil


—BGM—

பெண் : உருகுதே மருகுதே…
ஒரே பார்வையாலே…
உருகுதே மருகுதே…
ஒரே பார்வையாலே…

பெண் : உலகமே சுழளுதே…
உன்ன பாா்த்ததாலே…

ஆண் : தங்கம் உருகுதா…
அங்கம் கறையுதா…
வெட்கம் உடையுதா…
முத்தம் தொடருதா…

பெண் : சொக்கிதானே போகிறேனே…
மாமா கொஞ்சம் நாளா…

ஆண் : ஏய்… உருகுதே மருகுதே…
ஒரே பார்வையாலே…
உலகமே சுழளுதே…
உன்ன பாா்த்ததாலே…

பெண் : தங்கம் உருகுதே…
அங்கம் கரையுதே…
வெட்கம் உடையுதே…
முத்தம் தொடருதே…

ஆண் : சொக்கிதானே போகிறேனே…
நானும் கொஞ்சம் நாளா…

—BGM—

பெண் : உருகுதே மருகுதே…
ஒரே பார்வையாலே…
உலகமே சுழளுதே…
உன்ன பாா்த்ததாலே…

—BGM—

ஆண் : ஹே… அம்புலியில் நனைந்து…
சந்திக்கிற பொழுது…
அன்புக்கதை பேசி பேசி…
விடியுது இரவு… ஹோய்…

பெண் : ஏழு கடல் தாண்டிதான்…
ஏழு மலை தாண்டிதான்…
என் கருத்தமச்சான் கிட்ட…
ஓடி வரும் மனசு…

ஆண் : நாம சோ்ந்து வாழும் காட்சி…
ஓட்டி பாக்குறேன்…

பெண் : ஆஆ… காட்சியாவும் நெசமா மாற…
கூட்டி போகிறேன்…

ஆண் : ஓ… சாமி பாா்த்து கும்பிடும் போதும்…
நீதானே நெஞ்சில் இருக்க… ஓஓ… ஏஏயே…

பெண் : உருகுதே மருகுதே…
ஒரே பார்வையாலே…
உலகமே சுழளுதே…
உன்ன பாா்த்ததாலே…

—BGM—

ஆண் : ஊரைவிட்டு எங்கயோ…
வேர் அருந்து நிக்கிறேன்…
கூடு தந்த கிளிப்பெண்ணே…
உன்னாலதான் வாழுறேன்…

பெண் : கூரப்பட்டு சேலைதான்…
வாங்க சொல்லி கேக்குறேன்…
கூடு விட்டு கூடு பாயும்…
காதலால சுத்துறேன்…

ஆண் : கடவுள்கிட்ட கருவறை கேட்டு…
உன்ன சுமக்கவா…

பெண் : உதிரம் முழுக்க உனக்கே தான்னு…
எழுதி குடுக்கவா…

ஆண் : ஓ… மையிட்ட கண்ணே உன்னை…
மறந்தால் இறந்தே போவேன்… ஓஓஓ… ஓஓஓ…
உருகுதே மருகுதே…

பெண் : ஒரே பார்வையாலே…

ஆண் : உலகமே சுழளுதே…
உன்ன பாா்த்ததாலே…

பெண் : தங்கம் உருகுதே…
அங்கம் கரையுதே…
வெட்கம் உடையுதே…
முத்தம் தொடருதே…

ஆண் : சொக்கிதானே போகிறேனே…
நானும் கொஞ்சம் நாளா…

—BGM—


Notes : Uruguthey Maruguthey Song Lyrics in Tamil. This Song from Veyil (2006). Song Lyrics penned by Na. Muthukumar. உருகுதே மருகுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading