வெயிலோடு விளையாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு, ஜெஸ்ஸி கிப்ட், கைலாஷ் ஹெர் & வி.வி. பிரசன்னாஜி. வி. பிரகாஷ் குமார்வெயில்

Veyilodu Vilayadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாகி யாகி யாராகி யாகி யாகி யாகி…
யாராகி யாராகி யாராகி யாராகி ஹே…
தையாரே தையாரே ஹே யாகி யாகி யாகி…
ஏஹோ ராரா ரா…

ஆண் : வெயிலோடு விளையாடி…
வெயிலோடு உறவாடி…
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே…

ஆண் : நண்டூரும் நரியுரும்…
கருவேலங் காட்டோரம்…
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே…

ஆண் : பசி வந்தா குருவி முட்டை…
தண்ணிக்கு தேவன் குட்டை…
பறிப்போமே சோளத்தட்டை…
புழுதி தான் நம்ம சட்டை…
புழுதி தான் நம்ம சட்டை…

ஆண் : வெயிலோடு விளையாடி…
வெயிலோடு உறவாடி…
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே…

—BGM—

ஆண் : வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்…
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்…
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்…
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்…

ஆண் : அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி…
அப்பாவோட வேட்டியில…
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்…

ஆண் : அண்ணாச்சி கடையிலதான் எண்ணெயில தீக்குளிச்ச…
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்…

ஆண் : பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்…
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்…
வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்…

ஆண் : வெயிலோடு விளையாடி…
வெயிலோடு உறவாடி…
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே…

—BGM—

ஆண் : வெண்ணிலவ வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்…
பொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்…
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்…
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டுனோம்…

ஆண் : ஊமத்தம் பூவை மாத்தி…
கல்யாணம்தான் கட்டிக்குவோம்…
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்…

ஆண் : எங்க ஊரு மேகமெல்லாம்…
எப்பவாச்சும் மழை பெய்யும்…
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்…

ஆண் : தொப்புள்கொடியைப் போலத்தான்…
இந்த ஊரை உணர்ந்தோம்…
வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்…

ஆண் : வெயிலோடு விளையாடி…
வெயிலோடு உறவாடி…
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே…

ஆண் : நண்டூரும் நரியுரும்…
கருவேலங் காட்டோரம்…
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே…

ஆண் : பசி வந்தா குருவி முட்டை…
தண்ணிக்கு தேவன் குட்டை…
பறிப்போமே சோளத்தட்டை…
புழுதி தான் நம்ம சட்டை…
புழுதி தான் நம்ம சட்டை…

குழு : வெயிலோடு விளையாடி…
வெயிலோடு உறவாடி…
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே…

குழு : வெயிலோடு விளையாடி…
வெயிலோடு உறவாடி…
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே…


Notes : Veyilodu Vilayadi Song Lyrics in Tamil. This Song from Veyil (2006). Song Lyrics penned by Na. Muthukumar. வெயிலோடு விளையாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading