காதல் நெருப்பின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & சின்மயிஜி. வி. பிரகாஷ் குமார்வெயில்

Kadhal Neruppin Nadanam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் நெருப்பின் நடனம்…
உயிரை உருக்கி தொலையும் பயணம்…

பெண் : காதல் நீரின் சலனம்…
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்…

ஆண் : காதல் மாய உலகம்…
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்…

பெண் : புள்ளி மான்கள் புன்னகை செய்து…
வேடனை வீழ்த்தும்…

ஆண் : காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்…

பெண் : காதல் புயல்கள் உறங்கும்…
கடலின் மௌனம்…

—BGM—

ஆண் : கனவுகள் பூக்கின்ற செடியென…
கண்கள் மாறுது உன்னாலே…

பெண் : வயதிலும் மனதிலும் விட்டு விட்டு…
வண்ணம் வழியுது உன்னாலே…

ஆண் : உனது வலையாடும் அழகான கை தீண்டவே…
தலையில் இலை ஒன்று விழ வேன்டுமே…

பெண் : குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே…
உனது கை ரெண்டும் குடை ஆனதே…

ஆண் : உனது முத்தத்தில் நிறம் மாறுதே…
உடலில் ஒரு சூடு நாதி பாயுதே…

ஆண் : காதல் நெருப்பின் நடனம்…
உயிரை உருக்கி தொலையும் பயணம்…
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்…

—BGM—

ஆண் : வானத்தின் மறு புறம்…
பறவையாய் நீயும் நானும் போவோமே…

பெண் : பூமியின் அடிப்புறம்…
வேர்களாய் நீண்ட தூரம் போவோமே…

ஆண் : கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே…
காதல் மொழி கேட்டு மழை ஆனதே…

பெண் : நூறு நூற்றாண்டு காணாத பூவசமே…
பூமி எங்கெங்கும் தான் வீசுதே…

ஆண் : என்னுள் உன்னை உன்னுள் என்னை…
காலம் செய்யும் காதல் பொம்மை…

ஆண் : காதல் நெருப்பின் நடனம்…
உயிரை உருக்கி தொலையும் பயணம்…
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்…

—BGM—


Notes : Kadhal Neruppin Nadanam Song Lyrics in Tamil. This Song from Veyil (2006). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் நெருப்பின் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading