அதிசய ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே. ஜே யேசுதாஸ்எம்.எஸ். விஸ்வநாதன்அபூர்வ ராகங்கள்

Adhisaya Raagam Song Lyrics in Tamil


ஆண் : அதிசய ராகம்…
ஆனந்த ராகம்… ம்ம்…
அழகிய ராகம்… ம்ம் ம்ம் ம்ம்…
அபூர்வ ராகம்…

—BGM—

ஆண் : அதிசய ராகம்…
ஆனந்த ராகம்… ம்ம்…
அழகிய ராகம்… ம்ம் ம்ம் ம்ம்…
அபூர்வ ராகம்…

ஆண் : அதிசய ராகம்…

—BGM—

ஆண் : வசந்த காலத்தில் மழை தரும் மேகம்…
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்…
மோகம் ம்ம்ம் மோகம்…

ஆண் : வசந்த காலத்தில் மழை தரும் மேகம்…
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம்…

ஆண் : இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்…
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்…
இந்திர லோகத்து சக்கரவாகம்…

ஆண் : அதிசய ராகம்…
ஆனந்த ராகம்… ம்ம்…
அழகிய ராகம்… ம்ம் ம்ம் ம்ம்…
அபூர்வ ராகம்…

—BGM—

ஆண் : பின்னிய கூந்தல் கருநிற நாகம்…
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்…
பின்னிய கூந்தல் கருநிற நாகம்…
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்…

ஆண் : தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்…
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்…
அது என் யோகம்…

—BGM—

ஆண் : ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி…
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி…

—BGM—

ஆண் : இன்னுமா புரியல…

ஆண் : ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி…
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி…

ஆண் : முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி…
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி…
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி…
அவளொரு பைரவி அவளொரு பைரவி…

ஆண் : அதிசய ராகம்…
ஆனந்த ராகம்… ம்ம்…
அழகிய ராகம்… ம்ம் ம்ம் ம்ம்…
அபூர்வ ராகம்…

—BGM—


Notes : Adhisaya Raagam Song Lyrics in Tamil. This Song from Apoorva Raagangal (1975). Song Lyrics penned by Kannadasan. அதிசய ராகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading