காட்டுச் சிறுக்கி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் & மகாதேவன் & அனுராதா ஸ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்ராவணன்

Kaattu Sirukki Song Lyrics in Tamil


—BGM—

பெண் : காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ…
மாயமாய் போவாளோ…

ஆண் : ஓ… காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ…
மாயமாய் போவாளோ…

பெண் : ஈக்கி மின்னல் அடிக்குதடி…
ஆண் : யாத்தே…
பெண் : ஈர கொலக் துடிக்குதடி…
ஆண் : யாத்தே…

பெண் : ஈக்கி மின்னல் அடிக்குதடி…
ஆண் : யாத்தே…
பெண் : ஈர கொலக் துடிக்குதடி…
ஆண் : யாத்தே…

ஆண் : நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி…
அவ நெத்தியுல வச்ச பொட்டுல…
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே…
அவ நெத்தியுல வச்ச பொட்டுல…
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே…
அவ பார்வையில் எலும்புக பல்பொடி ஆச்சே…

பெண் : காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ…
மாயமாய் போவாளோ…

ஆண் : யாரோ எவளோ யாரோ எவளோ…
யார் காட்டுச் சிறுக்கி இவ…
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ…
மாயமாய் போவாளோ…

பெண் : தண்டை அணிஞ்சவ கொண்டை அரிஞ்சதும்…
அண்டசராசரம் போச்சு…

ஆண் : வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம்…
வாங்குதே பெருமூச்சு…

பெண் : காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ…
மாயமாய் போவாளோ…

—BGM—

ஆண் : உச்சந்தலை வகிடு வழி…
ஒத்த மனம் அலையுதடி…
ஒதட்டு வரி பள்ளத்துல…
உசிர் விழுந்து தவிக்குதடி…

ஆண் : பாழாப் போன மனசு பசியெடுத்து…
கொண்ட பத்தியத்த முறிக்குதடி…
பாராங்கல்ல சொமந்து வழி மறந்து…
ஒரு நத்தக்குட்டி நகருதடி…
கொண்டக் காலு செவப்பும் மூக்கு வனப்பும்…
என்னக் கிறுக்குன்னு சிரிக்குதடி…

ஆண் : ஓ… காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ…
மாயமாய் போவாளோ…

ஆண் : யாரோ எவளோ யாரோ எவளோ…
யார் காட்டுச் சிறுக்கி இவ…
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ…
மாயமாய் போவாளோ…

பெண் : தண்டை அணிஞ்சவ கொண்டை அரிஞ்சதும்…
அண்டசராசரம் போச்சு…
வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம்…
வாங்குதே பெருமூச்சு…

—BGM—

ஆண் : கிழிச்ச தடத்து வழி…
நீர் கிழிச்சு போவது போல்…
நீ கிழிச்ச கோட்டு வழி…
நீளுதடி எம்பொழப்பு…

—BGM—

ஆண் : ஊரான் காட்டு கனியே உன்ன நெனச்சு…
நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி…
யாத்தே இது சரியா இல்ல தவறா…
நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி…

ஆண் : உன்ன முன்ன நிறுத்தி என்ன நடத்தி…
கெட்ட விதி வந்து சிரிக்குதடி…

பெண் : ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…

ஆண் : ஓ காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ…
மாயமாய் போவாளோ…

பெண் : காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…

ஆண் : காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ…
மாயமாய் போவாளோ…

பெண் : காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…

பெண் : காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி…
யார் காட்டுச் சிறுக்கி இவ…


Notes : Kaattu Sirukki Song Lyrics in Tamil. This Song from Raavanan (2010). Song Lyrics penned by Vairamuthu. காட்டுச் சிறுக்கி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading