கோடு போட்டா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபென்னி டயல்ஏ.ஆர்.ரகுமான்ராவணன்

Kodu Poatta Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கோடு போட்டா…
கொன்னு போடு…
வேலி போட்டா…
ஹே… வெட்டி போடு…
நேத்துவரைக்கும் உங்க சட்டம்…
இன்னைக்கிருந்து எங்க சட்டம்…

ஆண் : கோடு போட்டா…
கொன்னு போடு…
வேலி போட்டா…
ஹே… வெட்டி போடு…
வில்ல போல வளைஞ்ச கூட்டம்…
வேல போல நிமிர்ந்து விட்டோம்…

ஆண் : சோத்துல பங்கு கேட்டா…
அட இலயப்போடு இலய…
சொத்துல பங்கு கேட்டா…
அவன் தலயப்போடு தலய…

ஆண் : ஊரான் வீட்டு சட்டத்துக்கு…
ஊரு நாடு மசியாது…
மேகம் வந்து சத்தம் போட்டா…
ஆகாயம்தான் கேட்காது…

ஆண் : பாட்டன் பூட்டன் பூமிய யாரும்…
பட்டா போடக் கூடாது…

—BGM—

ஆண் : பாம்பு கூட பழகி…
பசும் பால ஊத்தும் சாதி…
தப்பு தண்டா செஞ்சா…
அட அப்பத் தெரியும் சேதி…

ஆண் : கள்ளிக்காட்டு புள்ளத்தாச்சி…
கல்ல பெத்தா வீரனடா…
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா…
சரியும் குடலே மாலையடா…

ஆண் : செத்த கெழவன் எழுதிவச்ச…
ஒத்த சொத்து வீரமடா…

ஆண் : கோடு போட்டா…
கொன்னு போடு…
வேலி போட்டா…
ஹே… வெட்டி போடு…

—BGM—

ஆண் : எங்க காத்து…
மீன்சுட்ட வாசம் அடிக்கும்…
எங்க தண்ணி…
எரி சாராயம் போல் உறைக்கும்…

ஆண் : வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி…
ஒரு சப்பாத்திகள்ளி வாழ வேணாமே மும்மாரி…

ஆண் : எட்டுக்கானி போனா அட எவனும் ஏழை இல்ல…
மானம் மட்டும் போனா நீ மக்கா நாளே ஏழை…

ஆண் : மனைவி மாதா மட்டும் இல்ல…
மண்ணும் கூட மானம்தான்…
சீயான் காட்ட தோண்டிப் பாத்தா…
செம்மண் ஊத்து ரத்தம்தான்…

ஆண் : கோ கோ கோ கோடு போட்டா… ஹே ஹே…
கொன்னு போடு… ஹே ஹே…
வேலி போட்டா… ஹே ஹே…
வெட்டி போடு… ஹே ஹே…
நேத்துவரைக்கும் உங்க சட்டம்…
இன்னைக்கிருந்து எங்க சட்டம்…

—BGM—

ஆண் : கோடு போட்டா… ஹே ஹே ஹே…
கொன்னு போடு… ஹே ஹே ஹே…
வேலி போட்டா… ஹே ஹே ஹே ஹே…
வெட்டி போடு… ஹே ஹே ஹே…

ஆண் : நேத்துவரைக்கும் உங்க சட்டம்…
நேத்துவரைக்கும் உங்க சட்டம்…
நேத்துவரைக்கும் உங்க சட்டம்…
இன்னைக்கிருந்து எங்க சட்டம்…


Notes : Kodu Poatta Song Lyrics in Tamil. This Song from Raavanan (2010). Song Lyrics penned by Vairamuthu. கோடு போட்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading