பச்சை வண்ண பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாவை ராஜா வை

Pachchai Vanna Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்…
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்…
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்…
நான் இலை தழையோடு என் விரல் கோர்த்தேன்…

ஆண் : ஹே… புல்லின் மேலே பாதம் வைக்காமல்…
செல்கின்றேன் பெண்ணே…
உன் சொல்லை கேட்ட பின்னே…

ஆண் : ஹே… பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்…
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்…

BGM

ஆண் : என் கால் ஒன்றில் முள் குத்தினால்…
அவள் முள்ளுக்கு நோய் பார்க்கிறாள்…
வாய் கொண்டு பேசாத காய் தாங்கும் மரம் ஒன்றை…
தாயென்று சொன்னாலே எனை ஈர்க்கிறாய்…

ஆண் : நான் கிளை ஒன்றில் உந்தன் கை பார்க்கிறேன்…
அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே…
என் நெஞ்சில் வலி கொள்கிறேன்…

ஆண் : இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்…
ஹே… நானும் மரமாக ஏன் வரம் கேட்டேன்…
இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன்…
ஹே… நானும் மரமாக ஏன் வரம் கேட்டேன்…
ஏன் வரம் கேட்டேன்…

BGM

ஆண் : என் வீடெங்கும் காடாக்கினாய்…
என் காட்டுக்குள் கிளி ஆகினாய்…
கிளியொன்றின் கீற்றாகி இலை ஒன்றின் மூச்சாகி…
முகில் ஒன்றின் பேச்சாகி என்னை வீழ்கிறாய்…

ஆண் : ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய்…
நான் நீரற்று நின்றேன்…
நீ வந்து வீழ்ந்தாய்…
என் வேறெங்கும் தாராளமாய்…

ஆண் : மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்…
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன்…
மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன்…
என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன்…
நான் துளிர்கின்றேன்…

ஆண் : ஹே… பச்சை வண்ண பூவே சிரித்து போனாய்…
என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய்…
செடி கொடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன்…
நான் இலை தழையோடு என் விரல் கோர்த்தேன்…

ஆண் : ஹே… புல்லின் மேலே பாதம் வைக்காமல்…
செல்கின்றேன் பெண்ணே…
உன் சொல்லை கேட்ட பின்னே…

ஆண் : ஹே… பச்சை வண்ண பூவே…
ஹே பச்சை வண்ண பூவே…

BGM


Notes : Pachchai Vanna Song Lyrics in Tamil. This Song from Vai Raja Vai (2015). Song Lyrics penned by Madhan Karky. பச்சை வண்ண பூவே பாடல் வரிகள்.


Scroll to Top