காதல் சிலுவையில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷங்கர் மகாதேவன்ஜேம்ஸ் வசந்தன்சுப்ரமணியபுரம்

Kadhal Siluvayil Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை…
தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை…

BGM

ஆண் : காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை…
தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை…

ஆண் : கனவுகளில் விழுந்த என்னை…
கவலையிடம் அனுப்புகிறாள்…
இளமை என்னும் கருவறை எங்கும்…
எரிதழலை கொளுத்துகிறாள்…

ஆண் : உயிரும் விழும் போது…
உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ…

BGM

ஆண் : கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை…
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை…
புழுதியிலே இரத்தினமாய் இருந்தது ஒரு தொல்லை…
பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை…

ஆண் : சேவை பூமியை தினமும் தேனாக்கும்…
கோபம் துயரங்களை சேர்க்கும்…
கனவுகளில் விழுந்த என்னை…
கவலையிடம் அனுப்புகிறாள்…
இளமை என்னும் கருவறை எங்கும்…
எரிதழலை கொளுத்துகிறாள்…

ஆண் : உயிரும் விழும் போது…
உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ…

BGM

ஆண் : அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை…
கூண்டுக்கிளி நான் ஆனேன்…
வெளிவரவும் வாய்ப்பில்லை…

ஆண் : இவனுடைய உண்மைகளை உளர வழியில்லை…
தோல்விகளின் வீடானேன்…
துணை வரவும் ஆளில்லை…

ஆண் : வாழும் மானிடரின் சுமைகள் தீராது…
காலம் உறவுகளின் தீவு…
கனவுகளில் விழுந்த என்னை…
கவலையிடம் அனுப்புகிறாள்…
இளமை என்னும் கருவறை எங்கும்…
எரிதழலை கொளுத்துகிறாள்…

ஆண் : உயிரும் விழும் போது…
உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ…

ஆண் : காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை…
தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை…

BGM

ஆண் : காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை…
தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை…

ஆண் : கனவுகளில் விழுந்த என்னை…
கவலையிடம் அனுப்புகிறாள்…
இளமை என்னும் கருவறை எங்கும்…
எரிதழலை கொளுத்துகிறாள்…

ஆண் : உயிரும் விழும் போது…
உறவுகளும் வீணோ…
உலகம் இதுதானோ…


Notes : Kadhal Siluvayil Song Lyrics in Tamil. This Song from Subramaniapuram (2008). Song Lyrics penned by Yugabharathi. காதல் சிலுவையில் பாடல் வரிகள்.


Scroll to Top