காக்கும் கடவுள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
உளுந்தூர்பேட்டை சண்முகம்சீர்காழி கோவிந்தராஜன்டி.பி.ராமச்சந்திரன்விநாயகர் பாடல்கள்

Kaakkum Kadavul Song Lyrics in Tamil


BGM

ஆண் : கணபதி என்றிட கலங்கும் வல்வினை…
கணபதி என்றிட காலனும் கைதொழும்…
கணபதி என்றிட கருமம் ஆதலால்…
கணபதி என்றிட கவலை தீருமே…

BGM

ஆண் : காக்கும் கடவுள் கணேசனை நினை…
காக்கும் கடவுள் கணேசனை நினை…
கவலைகள் அகல அவன் அருள் துணை…

ஆண் : காக்கும் கடவுள் கணேசனை நினை…
கவலைகள் அகல அவன் அருளே துணை…
காக்கும் கடவுள் கணேசனை நினை…

BGM

ஆண் : யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்…
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்…
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்…
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்…

ஆண் : ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்…
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்…
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்…
காக்கும் கடவுள் கணேசனை நினை…

BGM

ஆண் : நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்…
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்…
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்…
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்…

ஆண் : ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்…
உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்…

ஆண் : காக்கும் கடவுள் கணேசனை நினை…
கவலைகள் அகல அவன் அருளே துணை…
காக்கும் கடவுள் கணேசனை நினை…


Notes : Kaakkum Kadavul Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Ulundurpettai Shanmugam. காக்கும் கடவுள் பாடல் வரிகள்.


Scroll to Top