சிலு சிலுவென்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் யேசுதாஸ்ஹாரிஸ் ஜெயராஜ்வனமகன்

Silu Silu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத…
வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா…
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட…
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா…

ஆண் : மேல் கீழாக அருவி எல்லாம்…
இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன் சொல்லுக்கண்ணம்மா…
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்…
அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா…

BGM

ஆண் : அன்பின் நிழல் வீசுதே…
இன்பம் விளையாடுதே…
பாறைக்குள்ளும் பாசம் இலை ஓடுதே…

ஆண் : வெயில் வரம் துாறுதே…
காடே நிறம் மாறுதே…
மேடை இன்றி உண்மை அரங்கேறுதே…

ஆண் : சொர்க்கம் இதுதானம்மா…
மேலே கிடையாதும்மா…
சொற்கள் கொண்டு சொன்னாலும் புரியாதம்மா…

ஆண் : சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத…
வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா…
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட…
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா…

BGM

ஆண் : முட்கள் கிழித்தாலுமே மொத்தம் அது ஆகுமே…
சோகம் கூட இங்கே சுகமாகுமே…

ஆண் : வேர்கள் கதை கூறுமே…
காலம் இளைப்பாருமே…
தெய்வம்கூட இங்கே பசியாறுமே…

ஆண் : இது நாம்தானடி மாறிப்போனோமடி…
மீண்டும் பின்னே போக வழி சொல்லடி…

ஆண் : சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத…
வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா…
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட…
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா…

ஆண் : மேல் கீழாக அருவி எல்லாம்…
இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன் சொல்லுக்கண்ணம்மா…
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்…
அந்த இரகசியம் சொல்லும் செல்லக்கண்ணம்மா…

BGM


Notes : Silu Silu Song Lyrics in Tamil. This Song from Vanamagan (2017). Song Lyrics penned by Madhan Karky. சிலு சிலுவென்று பாடல் வரிகள்.


Scroll to Top