ஒரே நாள் உன்னை நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்இளையராஜாஇளமை ஊஞ்சலாடுகிறது

Ore Naal Unainaan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது…
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது…

பெண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது…
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது…

BGM

ஆண் : மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க…
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க…

பெண் : சங்கமங்களில் இடம் பெரும்…
சம்பவங்களில் இதம் இதம்…

ஆண் : பணத்தால் நினைத்தால் இனிப்பதென்ன…

பெண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது…
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது…

BGM

பெண் : நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்…
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்…

ஆண் : கற்பனைகளில் சுகம் சுகம்…
கண்டதென்னவோ நிதம் நிதம்…

பெண் : மழை நீ நிலம் நான் மயக்கம் என்ன…

ஆண் : ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது…
உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது…

BGM

ஆண் : பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க…
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க…

பெண் : கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்…
கையிரண்டிலும் ஒரே லயம்…

ஆண் : இரவும் பகலும் இசை முழங்க…

பெண் : ஒரே நாள்…
ஆண் : உன்னை நான்…
பெண் : நிலாவில் பார்த்தது…

ஆண் : உலாவும்…
பெண் : உன் இளமைதான்…
ஆண் & பெண் : ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது… ஆஹாஆ…


Notes : Ore Naal Unainaan Song Lyrics in Tamil. This Song from Ilamai Oonjal Aadukirathu (1978). Song Lyrics penned by Vaali. ஒரே நாள் உன்னை நான் பாடல் வரிகள்.